அக்கா உடையவர்கள் இன்னொரு அம்மா உடையவர்கள் என்று சொல்வதுண்டு. தாய்ப் பாசத்திற்கு இணையானது தமக்கையின் பாசம். அப்படி தன் உடன்பிறப்புகளை காக்கும் முனைப்புடன் சின்னஞ்சிறிய அக்கா ஒருத்தியின் பாசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Yoda4ever என்ற பயனர் ட்விட்டரில் பதிந்துள்ள 25 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ, அக்கா ஒருவர் தனது உடன்பிறந்தவர்களிடம் கொண்டுள்ள கலப்படமற்ற அன்பை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் இடம் ஒன்றின் அருகிலுள்ள சாலையில் மூன்று சிறுவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக முன்பக்கமாக பாரம் ஏற்றியபடி ஒரு வாகனம் வருகிறது. உடனடியாக அந்த மூன்று சிறுவர்களில் மூத்தவள் தனது இரண்டு பிஞ்சுக் கரங்களையும் நீட்டியபடி வண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்கிறார். கூடவே, தனது உடன்பிறப்புகள் முன்னே சென்றுவிடாதபடி அவர்களுக்கு முன் ஒரு கவசமாக நிற்கிறாள்.
சிறுமியின் சமிக்ஞைக்கு வண்டி நிற்கவும், அருகில் இருக்கும் கட்டிடத்திற்குள் தனது உடன்பிறப்புகளை ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்துவிட்டு, வண்டிக்கு வழிவிட்டு தானும் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து கொள்கிறாள். தனது தமக்கை வேலையை தீவிரமாக செய்யும் சிறுமியின் செயல் நமக்குள் ஆனந்த புன்னகையை வரவழைக்கத்த தவறுதில்லை.
"ஒரு சிறுமி தனது அக்கா வேலையை தீவிரமாக செய்கிறார்" என்ற வாசகத்துடன் இந்த வீடியோ டிச.14-ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். 30 ஆயிரம் பேர் விரும்பியுள்ளனர். பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பயனர் ஒருவர், " வாவ்... ஒரு சின்னஞ்சிறுமிக்கு தனது உடன்பிறந்தவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. அந்த வண்டி ஓட்டுநரும் அற்புதமானவர் எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், “இவர் மிகச் சிறந்த அக்கா. தனது சகோதர்களை மிகவும் கரிசனத்துடன் பாதுகாக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
“நல்ல சிறுமி. நான் அவளை அரவணைத்து எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று மூன்றாவது பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். “உங்களுடைய வாசகம் மட்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை பார்க்கும் பலர் இது ஒரு சீன விபத்து வீடியோ என்றே நினைத்திருப்பார்கள்” என்று நான்காவது நபர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
14 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
28 days ago