இந்தியாவின் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபரான நசீர் கான், இந்தியாவில் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கியுள்ளார். அவர் மெக்லாரன் 765 LT ஸ்பைடர் எனும் காரை வாங்கியுள்ளார். இந்த காரை இந்தியாவில் வைத்துள்ள ஒரே நபரும் அவர்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்திலான இந்த காரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தடபுடலாக வரவேற்பு கொடுத்துள்ளார் நசீர். கார் பிரியரான நசீரிடம் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, ஃபோர்டு, லாம்போகினி நிறுவன கார்கள் உட்பட பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளதாம்.

தற்போது அவர் வாங்கியுள்ள மெக்லாரன் 765 LT ஸ்பைடர் கார் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மெக்லாரன் நிறுவன தயாரிப்பாகும். இந்நிறுவனம் உலகம் முழுவதும் கார்களை விற்பனை செய்து வருகிறது.

மெக்லாரன் 765 LT ஸ்பைடர் கார் அந்நிறுவனத்தின் பிரத்யேக தயாரிப்புகளில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பே அதன் வடிவமைப்பு தோற்றம் தானாம். 4.0 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்ட் வி8 பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது இந்த கார். இதன் என்ஜின் 765 Ps மற்றும் 800 Nm டார்க் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

51 mins ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

மேலும்