பெர்ஹாம்பூர்: ஒடிசாவின் கன்ஞம் மாவட்டம், பெர்ஹாம்பூரை சேர்ந்தவர் நாகேஷ் பத்ரோ (31). சிறுவயது முதல் கல்வியில் சிறந்து விளங்கிய அவர் வறுமையின் காரணமாக 11-ம் வகுப்புக்கு பிறகு படிப்பை தொடர முடியவில்லை. குஜராத்தின் சூரத் நகரில் உள்ளஆலையில் 2 ஆண்டு தொழிலாளியாக பணியாற்றினர்.
பின்னர் ஊருக்கு திரும்பியஅவர் கடந்த 2012-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார். வேலை செய்து கொண்டே தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
தற்போது பெர்ஹாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பகலில் வருகைதரு பேராசிரியராக நாகேஷ் பணியாற்றி வருகிறார். இதில் கிடைக்கும் ஊதியத்தின் மூலம் அவர் வசிக்கும் பகுதியில் ஏழை மாணவ, மாணவியருக்காக டியூசன் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 4 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.3,000 ஊதி யத்தை நாகேஷ் வழங்குகிறார்.
பேராசிரியராகப் பணியாற்று வதன் மூலம் கிடைக்கும் வரு மானம் டியூசன் சென்டரை நடத்தபோதுமானதாக இல்லை. எனவே பெர்ஹாம்பூர் ரயில் நிலையத்தில் இரவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக (போர்ட்டர்) நாகேஷ் வேலை செய்கிறார். ரயில் பயணிகளின் சுமைகளை தூக்கிச் செல்வதன் மூலம் அவருக்கு ஓரளவு பணம் கிடைக்கிறது. அந்த பணத்தையும் டியூசன் சென்டரை நடத்த நாகேஷ் செலவிடுகிறார்.
» மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைக்கும்: அண்ணாமலை உறுதி
» காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுக்கா பள்ளிகளுக்கு மழை விடுமுறை
இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனது பெற்றோர் கூலி தொழிலாளர்கள். அனைத்து வகுப்புகளிலும் நானே முதல் மாணவனாக விளங்கினேன். ஆனால் வறுமையின் காரணமாக என்னால் பள்ளிப்படிப்பைகூட நிறைவு செய்ய முடியவில்லை. ஜவுளி ஆலையில் கூலி வேலை செய்தேன். அதில் கிடைத்த பணத்தின் மூலம் முதுகலை வரை பட்டம் பெற்றேன்.
பேராசிரியர் பணி மூலம் மாதம்
ரூ.12,000 மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. ஏழை மாணவ, மாணவியருக்காக டியூசன் சென்டரை தொடங்கி 4 ஆசிரியர்களை பணியமர்த்தி உள்ளேன். அவர்கள் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துகின்றனர். ஆசிரியர்களுக்கு நானே ஊதியம் வழங்குகிறேன்.
பேராசிரியர் பணி மூலம் கிடைக்கும் வருமானத்தால் டியூசன் சென்டரை நடத்த முடிய வில்லை. எனவே போர்ட்டராக வேலை செய்கிறேன். அதில் கிடைக்கும் பணத்தையும் டியூசன் சென்டருக்காக செலவிடுகிறேன்.
சில மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் செலுத்துகிறேன். சிறுவயதில் ஏழ்மையின் காரணமாக என்னால் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதற்காக இரவு, பகலாக உழைக்கிறேன். நேரம் கிடைக்கும் போது நானே டியூசன் சென்டரில் வகுப்புகளையும் நடத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வைரலான நாகேஷ்
நாகேஷ் குறித்த செய்தி, புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. ‘‘திரைப்படங்களில் பல்வேறு கதாநாயகர்களை பார்த்து ரசித்திருக்கிறோம். ஆனால் நாகேஷ் போன்றவர்களே உண்மையான கதாநாயகர்கள்’’ என்று வலைதளவாசிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago