குளிர் காலத்தில் நாய்களை தாக்கும் வலிப்பு நோய்: தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

நாமக்கல்: குளிர் காலத்தில் நாய்களை தாக்கும், ‘கெனைன் டிஸ்டெம்பர்’ என்ற வலிப்பு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குளிர் காலமான நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நாய்களை, ‘கெனைன் டிஸ்டெம்பர்’ என்ற வலிப்பு நோய் அதிகமாக தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய் அனைத்து வயதான நாய்களையும் தாக்கும். எனினும் 6 மாத வயதுக்கு குறைவாக உள்ள நாய்களை அதிகமாகத் தாக்கும்.

இந்நோயினால் பாதிக்கப்படும் நாய்களில் 80 சதவீதத்துக்கும் மேல் தடுப்பூசி போடப்படாத நாய்களாகும். காய்ச்சல், சாப்பிடாமல் இருத்தல், கண்களில் பூழை வடிதல், வாந்தி, ரத்தம் கலந்த பேதி, மூக்கில் சளி வடிதல், அடி வயிற்றில் கொப்புளங்கள் தோன்றுதல், வலிப்பு ஏற்படுதல், கீழ்த்தாடை படபடவென்று அடித்துக் கொள்ளுதல், நடக்க முடியாமல் போதல் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள்.

வலிப்பு போன்ற நரம்பு மண்டல அறிகுறிகள் காணப்பட்டால் பாதிக்கப்பட்ட நாய்கள் பெரும்பாலும் இறந்துவிடும். இந்நோய்க்கு சிகிச்சை அளித்தாலும் பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை. தடுப்பூசி போடுவதே இந்நோயை தடுக்கும். இந்நோயை தடுக்க நாய்க் குட்டிகளை ஒன்றரை வயதுக்கு பின்புதான் தாயிடமிருந்து பிரிக்க வேண்டும்.

தாயிடமிருந்து பிரிக்கும் முன்பாக குட்டிகளின் 42-ம் நாளில் பார்வோ வைரஸ், கெனைன் டிஸ்டெம்பர், எலிக்காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியை போடவேண்டும். பிறகு 21 நாட்கள் அல்லது 3 வாரங்கள் இடைவெளியில் இதே தடுப்பூசியினை இரண்டாவது முறையாக போடவேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியை மார்ச் மாதத்துக்கு முன்பாக போடவேண்டும். தரமான நாய்க்குட்டிகளை விற்பவரிடமே நாய்க்குட்டிகளை வாங்க வேண்டும்.

மேலும் இந்நோய்க்கு எதிரான தடுப்பூசி, தாய் நாய்க்கு போடப்பட்டிருப்பதை குட்டி வாங்கும் முன்பு உறுதி செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் முன்பாக நாய்க் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

மேலும்