உணவு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த உணவு கிடைக்காமல் உலகில் யாரும் இருக்கக் கூடாது என்ற இலக்கை அடைய உருவாக்கப்பட்ட தினம்தான் உலக உணவு தினம்.
ஐ,நா. சபையின் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organisation-FAO) 1945 அக்டோபர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. எஃப்.ஏ.ஓ. அமைப்பு தொடங்கப்பட்ட நாள், உலக உணவு நாளாக 1979ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பசியையும் பட்டினியையும் போக்கி உலகில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்தும் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டின் உலக உணவு தினம் இன்றைய தினம் (அக்.16) கடைபிடிக்கப்படுகிறது. ‘லீவ் நோ ஒன் பிகைண்டு’ (Leave NO ONE behind ) என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறந்த உலகை உருவாக்குவதில் நாம் முன்னேறி இருந்தாலும், பலர் இன்னும் பின்தங்கி உள்ளனர். உண்மையில் உலகில் கோடிக்கணக்கான கணக்கான மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பது இல்லை. இவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கும் ஆபத்து உள்ளது. உலகத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஏழைகள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் பலர் விவசாயம் மற்றும் இயற்கை வளங்களை தங்கள் வாழ்க்கை தேவைக்கு நம்பியுள்ளனர். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களால் இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
அனைவரும் உணவு அளிப்பது மட்டுமே பட்டினியை முடிவுக்கு கொண்டு வராது. சத்தான உணவு கிடைப்பதில்தான் பிரச்சினை உள்ளது. கரோனா தொற்று, காலநிலை மாற்றம், சமத்துவமின்மை, சர்வதேச அளவில் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக பொதுமக்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். இது உலகம் முழுவதும் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எல்லா பகுதிகளிலும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க கூடிய உலகத்தை நாம் உருவாக்க வேண்டும். யாரும் பின்தங்கி விடக் கூடாது என்பதை கருப்பொருளாக கொண்டு இந்த உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
» இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு
» புதுச்சேரி | நவ.27, 30 தேதிகளில் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வு
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று உலகின் பல்வேறு அமைப்புகள் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் உணவு கிடைக்காமல் பட்டினியாக உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக உலகில் பட்டினியாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. 2019ம் ஆண்டில் 135 மில்லியலின் இருந்த இந்த எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 345 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பட்டினியாக இருந்தவர்களின் எண்ணிக்கை 282 மில்லியன். ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 345 மில்லியனாக உயர்ந்துள்ளது. உலகில் 828 மில்லியன் மக்கள் தினசரி இரவு உணவு உட்கொள்வதில்லை என்று உலக உணவு திட்டம் அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியாகி உள்ள உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 107வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 121 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, சைல்டு ஸ்டன்டிங், சைல்டு மார்டாலிட்டி மற்றும் சைல்ட் வேஸ்டிங் உள்ளிட்ட 4 காரணிகளின் அடிப்படையில் இது கணக்கீடப்படுகிறது. இந்த 4 காரணிகளில் ஒரு நாடு இருக்கும் மதிப்பெண்களைக் கொண்டு ஒட்டு மொத்த மதிப்பெண்களும், தரவரிசையும் வெளியிடப்படுகிறது. இதன்படி இந்தியா 29.1 மதிப்பெண்கள் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த நேரத்தில் "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதியின் கூற்றுதான் ஞாபகம் வருகிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
17 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago