ஓசூர்: ஓசூர் மத்திகிரியில் அமைந்துள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அக்டோபர் 14-ம் தேதியான இன்று உலக முட்டை தின விழா கொண்டாடப்பட்டது.
உலக முட்டை தினம் 1996-ம் ஆண்டு முதல் உலகமெங்கும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதனால் விளையும் உடல் நலப்பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
முட்டையில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் கருவுற்ற பெண்களின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. ஒரு முட்டையில் 13-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அடங்கியுள்ளது. இந்த முட்டையின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இன்று உலக முட்டை தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு வேக வைத்த முட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி பங்கேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வேகவைத்த முட்டைகள் வழங்கினார். தொடர்ந்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேகவைத்த முட்டைகள் வழங்கப்பட்டது.
» கடலூரில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு - வைரலாகும் ரஜினி, நெல்சன் புகைப்படங்கள்
» சிறையில் உண்ணாவிரதம்; முருகனுக்கு சிகிச்சை வழங்க கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மேலும் முட்டையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இளங்கலை கோழியின தொழில் நுட்பம் பயிலும் மாணவர்களும் மற்றும் ஓசூர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமையல்கலை அறிவியல் மற்றும் மேலாண்மை துறை மாணவர்களும் இணைந்து தயாரிக்கப்பட்ட முட்டை சாலெட், முட்டை மசாலா, முட்டை பிரைட்ரைஸ், முட்டை தோசை உட்பட 15 வகையான முட்டை உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், முட்டையின் மகத்துவம் குறித்து விளக்கும் கோலப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.டி.செல்வன், கல்லூரி மருத்துவர்கள் முனைவர் சாம்சுதீன், முனைவர் ரமேஷ், முனைவர் ராஜ்மனோகர், முனைவர் ஜெயந்தி உட்பட 11 மருத்துவர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.டி.செல்வன் கூறும்போது, “உலக அளவில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் முட்டை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ குழுமம் வழிகாட்டுதலின்படி ஒரு நாளைக்கு ஒவ்வொருவருக்கும் அரை முட்டை வீதம் ஒரு ஆண்டுக்கு 180 முட்டைகளை சாப்பிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு சராசரியாக 68 முட்டைகளை மட்டுமே சாப்பிடுகிறோம். நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் புரதம், வைட்டமின் ஏ,பி, ஃபோலிக் அமிலம் மற்றும் டி வைட்டமின்கள் ஆகியவை ஒரு முட்டையில் 20 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
மேலும், ஒரு முட்டையில் சராசரியாக 6கிராம் உயர்தரப் புரதம் கிடைக்கிறது. ஆகவே கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி சார்பில் உலக முட்டை தினத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டையின் பயன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
20 days ago