துபாய்: ஐபோன் 14 புரோ ஸ்மார்ட்போன் வாங்க இந்தியர் ஒருவர் துபாய்க்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்திற்காக விமான டிக்கெட் மற்றும் விசா போன்றவற்றுக்காக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அவர் செலவு செய்துள்ளார். ஐபோன் மீது அவர் கொண்டுள்ள தீவிர மோகத்தின் வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.
சினிமா படங்களில் கதாநாயகர்கள் சாத்தியமில்லாத சில பயணங்களை மேற்கொள்ளும் காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். தாமிரபரணி படத்தில் விஷால், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா என சில காட்சிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதே போலதான் இந்த இந்தியரும் பயணம் செய்துள்ளார். என்ன இவர் ஐபோன் மீது கொண்ட மோகத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவில் இந்த போன் விற்பனைக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாக துபாயில் அதனை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஐபோன் 14 சீரிஸ் போனை பயன்படுத்தும் இந்தியர்களில் முதல் வரிசை பயனராக அவர் இணைந்துள்ளார். அவர் பெயர் தீரஜ் பல்லியில் என தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறாராம்.
512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஐபோனின் 14 புரோ போனை அவர் வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.1,29,000 என தெரிகிறது. அது தவிர விமான டிக்கெட் மற்றும் விசா நிமித்தகமாக சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார் என தெரிகிறது. இதற்கு முன்னரும் அவர் இதே போல ஐபோன் வாங்க துபாய்க்கு பயணம் செய்துள்ளார் அவர் என தெரிகிறது. கடந்த 2017-ல் ஐபோன் 8 மாடல் வாங்க துபாய்க்கு சென்றுள்ளார் அவர். அதன் பிறகு ஐபோன் 11 புரோ மேக்ஸ், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மாடல் வாங்க அவர் இதற்கு முன்னர் துபாய் சென்றுள்ளதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago