மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் போக்க ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - மதுரை அரசு மருத்துக் கல்லூரி முன்முயற்சி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கவும், மன அழுதத்தால் ஏற்படும் தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து தடுப்பதற்காகவும் ‘மனநல நல்லாதரவு மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் உள்ள 75 முதல் 95 சதவீதம் பேர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுக முடிவதில்லை என உலக மனநல கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அதனால், மனச்சிதைவு, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல், கல்வி பயில முடியாமல் தங்களுக்கு என்ன பிரச்னை என்பதை உணர முடியாமல் மன அழுத்தத்துடன் சிரமப்படுகின்றனர். சமீப காலமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்கள், வகுப்பறை கல்வி முதல் அரசு மருத்துவமனை மருத்துவப் பணிகள் வரை அவர்கள் மன அழுத்ததிற்கு ஆளாகுவதாக கூறப்படுகிறது.

அதனால், தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்காக இந்த மன்றம் தொடங்கப்பட்டது. டீன் ரத்தினவேலு தொடங்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் விஜயராகவன், மனநல மருத்துவப் பிரிவு தலைவர் அமுதா, உதவிப் பேராசிரியர்கள் கார்த்திக், கிருபாகரா கிருஷ்ணன், அருன் பிரசன்னா கலந்து கொண்டனர்.

டீன் ரத்தினவேலு கூறும்போது, “மாணவர்கள் வழிகாட்டவும், ஆலோசனை பெறவும் வழியில்லாமல் சில நேரங்களில் தற்கொலை எண்ணத்திற்கு செல்கின்றனர். இதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் மனநல வழிகாட்டியாக ஒரு உதவிப் பேராசிரியரும், மனநல தூதுவர்களாக மாணவர் பிரதிநிதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டு படிக்கும் 2 பேரும் நியமிக்கப்படுகிறார்கள்.

மன அழுத்தத்திற்கு ஆளாகும் மருத்துவ மாணவர்களுக்கான மனநல ஆலோசனைக்காக 24 மணி நேரமும் இந்த மன்றத்தை தொடர்பு கொள்ள வசதியாக ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணும் வழங்கப்படுகிறது. இந்த தொலைபேசி எண், மருத்துவம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கண்ணில் படும்படி வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனை வார்டுகளில் ஓட்டப்படுகிறது. இந்த ஹெல்ப் லைன் மொபைல் எண், மனநலத் துறையில் அன்று பணியில் உள்ள மருத்துவர்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் அந்த ஹெல்ப் லைனில் அழைக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவார்கள்.

மனநலத் துறை, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் மனநல தூதுவர்களையும் ஒருங்கிணைத்து இந்த மனநல நல்லாதரவு மன்றத்தை செயல்படுத்துகிறது.

இந்த மனநல நல்லாதரவு மன்றத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர்கள், மனநல தூதுவர்கள், விடுதி வார்டன்களுக்கு மாணவர்களுக்கு மன நலம் மேம்படுத்துவது, மனநல பிரச்சினை மற்றும் நெருக்கடியில் இருக்கும் மாணவர்களை அடையாளம் காணுவது போன்ற பயிற்சிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பிறகு அவர்கள் மூலம் வகுப்பறை முதல் அரசு மருத்துவமனை வரை மருத்துவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கையாளுவார்கள். ஒன்று அல்லது மூன்று மாதத்திற்குள் ஒரு முறை இந்த மனநல நல்லாதரவு மன்றம் கூடி மாணவர்களிடம் கண்டறியப்பட்ட பொதுவான பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சனைகளை ஆலோசிப்பது, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வழிகாட்டுதல்களை ஆய்வு செய்வோம். இந்த மன்றம் மூலம் மருத்துவ மாணவர்கள் மனநலன் பாதுகாக்கப்படும” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்