இன்று உலக மக்களின் வாழ்க்கை கேட்ஜெட் சூழ் உலகமாக அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், டேப்லெட் என இதன் பட்டியில் நீளமாக போய்க் கொண்டே இருக்கிறது. காற்றை போல 24/7 என இந்த கேட்ஜெட்கள் நம்மை ஆட்கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் அளவு கடந்து ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் பயன்பாடு தொடர்ந்தால் வெகு விரைவில் அதன் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது கண் மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவார்கள் என்பது புது ரகமாக உள்ளது.
இதற்கு காரணம் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் கருவிகளில் இருந்து வெளிப்படும் ப்ளூ லைட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதால் அதன் பயனர்கள் விரைந்து வயதான தோற்றம் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாவார்கள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இதனை பார்ப்பதால் நமது உடலில் உள்ள செல், தோல், நியூரான்களில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வயதான தோற்றம் பெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் ப்ளூ லைட் பார்ப்பதால் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியைத் தடுக்க படுவதாகவும் தகவல். அதனால் கூடுமான வரையில் கேட்ஜெட் பயனில் கவனம் செலுத்தி உடல் நலனை காப்போம்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
18 days ago