இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக பந்தல் அமைத்து வைக்கப்படும் மெகா சைஸ் விநாயகர் சிலைகள் அதன் பிரம்மாண்டத்தின் காரணமாக கவரும். சமயங்களில் அந்த பந்தல்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழக்கமான விநாயகராக இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது பலரையும் ஈர்க்கும்.
அந்த வகையில் அமைந்துள்ளது ‘புஷ்பா’ படத்தின் டிரேட்மார்க் போஸ் கொடுக்கும் விநாயகர் சிலை ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கெத்தாக ஒரு போஸ் கொடுத்திருப்பார். அதை அப்படியே விநாயகர் சிலையாக வடித்துள்ளனர் விநாயகர் சிலை வடிவமைப்பாளர்கள்.
புஷ்பாவை போலவே வெள்ளை நிற பைஜாமா அணிந்தபடி நான்கு கரங்களுடன் கெத்தாக ஒரு கட்டையில் அமர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன். அது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் அந்த போஸ் உலக அளவில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இருந்தும் இதற்கு கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளன. சிலர் இது தொடர்பாக தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதேபோல் ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் ராம் சரண் போஸ் ஒன்றும் விநாயகர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
» கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
» குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு; பெல்ஜியம் நபரின் கோரிக்கை நிராகரிப்பு
Insane Craze of @AlwaysRamCharan
— (@im_RCult) August 31, 2022
RamCharan's character from RRR has dominated this year's Ganesh chaturdhi with lot of Alluri idols #HappyGaneshChaturthi #ManOfMassesRamCharan pic.twitter.com/MmBSQxQdzT
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
21 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago