விநாயகர் சதுர்த்தி | கடல் மணலில் விநாயகர் சிலையை வடித்த மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

By செய்திப்பிரிவு

பூரி: உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மெகா சைஸ் விநாயகர் சிலையை வடித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு சிறிய அளவிலான களிமண் சிலை முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டிக்கப்பட்டு, மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் மெகா விநாயகர் சிலை ஒன்றை வடித்துள்ளார். இந்த பணிக்கு பூக்கள் மற்றும் 3425 மணல் லட்டுகளை அவர் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விநாயகர், லட்டு பிரியர் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு மிகவும் பிடித்த லட்டுவை கொண்டு சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ள இந்த சிலை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பிளாஸ்டிக் பாட்டில், கடல் சங்கு போன்றவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலையை அவர் வடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

21 hours ago

வாழ்வியல்

22 hours ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்