விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓசூரில் வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது.
மூன்று மாநில எல்லையில் உள்ள தொழில் நகரமான ஓசூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய பன்மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலும், பொது இடங்களிலும் விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இதற்காக ஓசூர் மகாத்மா காந்தி சாலை, நேதாஜி நகர் உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள தனியார் மண்டபங்களில் 10 அடிக்கும் உயரமான பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமான உற்சாகத்தை இழந்திருந்தது.
இந்நிலையில், இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
அதேநேரம் இந்தாண்டு வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான சிலைகள் அதிகம் தயாரிக்கப்பட்டு, விற்பனையும் களைகட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஓசூர் மகாத்மா காந்தி சாலையில் விநாயகர் சிலை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி மதுகுமார் கூறியதாவது:
ஓசூர் தோட்டகிரி மற்றும் இதர பகுதிகளில் களிமண் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கரோனாவை தொடர்ந்து சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையே மக்கள் வாங்கிச் செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, ஒரு அடி முதல் 3 அடி வரை உள்ள சிலைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம்.
நடப்பாண்டில், தலையில் தலைப்பாகை கட்டிய கணபதி (20 வடிவங்கள்), 7 தலை ராஜநாக கணபதி, மயில்வாகன கணபதி, கிருஷ்ணர் கணபதி, சிங்கவாகன கணபதி, படகு சிம்மாசன கணபதி, ஊஞ்சலாடும் கணபதி, லால்பாக் ராஜா கணபதி, பட்டு ஜரிகை அங்கவஸ்திர கணபதி உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்ட்ட கலை நயமிக்க வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இச்சிலைகள் ரூ.500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். இதில், கவுரி சிலைகளின் விலை ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago