சதுரங்க விளையாட்டை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக ராஜா, ராணி, சிப்பாய்களை சதுரங்க காய்கள் போல தோன்றும் கலைஞர்கள் போரிட்டு வெற்றி பெறுவதை அழகாக விவரணையோடு சித்தரித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
இதில், தமிழர்களின் வீரம் சார்ந்த கலைகள் மூலம் சதுரங்க விளையாட்டில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படுகின்றன என்பதை விறுவிறுப்பாகவும், வீரத்தை மெய்ப்பிக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோ தற்போது அதிகமான பார்வையாளர்களை கவர்ந்ததுடன், இதில் நடித்துள்ள கலைஞர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரால் வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டு அது முதல்வரால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பேசினோம்.
“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வித்தியாசமாக ஒரு வீடியோ தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆர்ட்டிஸ்ட்களை பார்த்து பார்த்து தேர்வு செய்தேன். எனக்கு தெரிந்த 2 நல்ல ஆர்ட்டிஸ்ட்களுடன் சேர்த்து, பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, மல்யுத்தம், சிலம்பம் போன்ற கலைகள் சார்ந்த 32 கலைஞர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.
‘செஸ் போர்’ வீடியோ உருவான விதம்:
இந்த வீடியோவிற்கு செந்தில் பிரசாத் என்பவர் இசை அமைத்தார். அதில் கொஞ்சம் சிறப்புகளைச் செய்திருக்கிறார். குதிரை கனைப்பது போல பின்னணி எல்லாம் சேர்த்து ஒரு அழகான இசையை அமைத்துக் கொடுத்துள்ளார். முதலில் நாங்கள் இசையைதான் உருவாக்கினோம். அதன்பிறகே ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்தேன்.
அதற்காக கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்ற பெண்கள் தின சிறப்பு நிகழ்வில் பிரியதர்ஷினி என்னும் கலைஞர் கலந்து கொண்டு நடனம் ஆடினார். அவரின் சிறப்பான நடனத்தால் அப்போதே நான் அவரை நோட் செய்து வைத்திருந்தேன். தற்போது இந்த வீடியோவிற்கு அவர் சரியாக இருப்பார் என்று ஞாபகம் வந்தது. அவர் புதுக்கோட்டை இசைக்கல்லூரியின் முன்னாள் மாணவி. அவர் தற்போது பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்புகொள்ள, நான் அவரின் டீச்சரிடம் சொல்லி அவரை புதுக்கோட்டைக்கு ஆடிஷனுக்கு வரச் செய்தேன். அவர் வந்ததையடுத்து, என்னுடன் பணிபுரியும் நரேந்திர குமாரும், நானும் சேர்ந்து அவரை கறுப்பு குயினுக்கு சரியானவராக இருந்ததால் தேர்வு செய்துவிட்டோம்.
அடுத்ததாக வொயிட் குயினுக்காக என் நினைவில் வந்தவர் சஹானா.
அவர் என்னுடைய ட்ரூப்லயே நிறைய ஆடியிருக்கிறார். அதன்மூலம் பழக்கம். அவங்க அடையாறு மியூஸிக் கல்லூரியின் மாணவி. அவ்வப்போது ஃப்ரிலான்ஸ் டான்ஸரும் கூட. அவரும் தெரிந்தவர்தான் என்பதால் வொயிட் குயினுக்காக சரியாக இருப்பார் என்று நினைத்தேன். அதுவும் சரியாக இருந்தது.
அடுத்ததாக வெள்ளை ராஜாவாக வந்தவர் சீனிவாஸ். அதுபோல கறுப்பு ராஜாவையும் தேர்வு செய்தோம்.
அதற்கு முன்பு போர் வீரர்களை தேர்வு செய்ய நினைத்தேன். அதுவும் டான்ஸிற்கு மட்டுமே எட்டு, எட்டு போர் வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஐடியாவை திடீரென தவிர்த்துவிட்டேன். போர் வீரர்கள் கொஞ்சம் வீரியமாக இருக்க வேண்டும் என்பதால் சிலம்பம் சுற்றி கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றியது.
அதற்கு பிறகு `பவர்` பாண்டி மாஸ்டரை தொடர்பு கொண்டு இந்த வீடியோ குறித்துப் பேசினேன். அவர் அதற்காக திருவள்ளூரில் இருந்து முருகக்கனி டீமில் இருந்து 8 பெண்கள், 8 ஆண்களை தேர்வு செய்து கொடுத்தார்.
பிறகு செஸ் விளையாட்டில் முக்கியத்துவமாக குதிரை வரும் என்பதால், பொய்க்கால் குதிரை ஆர்ட்டிஸ்ட் நான்கு பேரை செலக்ட் செய்தோம். பின்னர் கூத்துப்பட்டறை ஆர்ட்டிஸ்ட் பழனிவேலுடன் பேசி அவரின் பங்களிப்பும் வேண்டும் என்று கேட்டேன். அவர் சிறந்த தெருக்கூத்து கலைஞர். அவரும் சரி என.. அவருடன் சேர்த்து மொத்தம் நான்கு தெருக்கூத்து கலைஞர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து வந்து நடித்திருக்கின்றனர். அவர்கள் இந்த வீடியோ முழுவதும் வில் அம்புடன் வருவார்கள்.
மொத்தத்தில் ஒரே நாளில் ஆடிஷன் முடித்தோம். சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ புக் செய்து, ஒரே நாளில் படம் முழுவதை ஷூட் செய்து முடித்தது டீம். அதன்பிறகு எங்களது வீடியோவை தமிழக முதல்வர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, ரிலீஸ் செய்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது” என்கிறார் சிரிப்புடன்.
தமிழகம் சார்ந்த கலைஞர்களுடன் குழந்தைகள் அனைவரும் இதனைப் பார்த்தபின் செஸ் விளையாட்டை விருப்பத்துடன் விளையாடக் கூடிய மனநிலையை ஏற்படுத்தியிருக்கும். இந்த வீடீயோவில், நமக்கெல்லாம் ஒரு குட்டி `பாகுபலி` பார்த்த பீல் கொடுத்துள்ளார் புதுக்கோட்டை ஆட்சியர்.
வீடியோவை இங்கே காணலாம்
Loading...
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago