அதிகரிக்கும் மக்கள்தொகை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

By செய்திப்பிரிவு

இந்தியா உலகின் அதிக மக்கள்தொகையுள்ள நாடாகப் போகிறது. இது 2030-ல் நடக்கும் என்றுதான் மக்கள்தொகைக் கணிப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தார்கள். 2021 மே மாதம் சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியானது.

அந்த அறிக்கை 2025-லேயே சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றது. கடந்த ஜூலை 11 அன்று ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியானது. மக்கள்தொகையில் இந்தியா முடிசூடும் நாளை அந்த அறிக்கை இன்னும் முன்னதாகவே குறித்துவிட்டது.

அந்த நாள் 2023 ஜூலை 15. ஐ.நா. மதிப்பீட்டின்படி இந்திய மக்கள்தொகை 142.8 கோடியாக ஆகியிருக்கும். சீனா 142.6 கோடியுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். 2050ஆம் ஆண்டில் இந்திய மக்கள்தொகை 167 கோடியை எட்டியிருக்கும். அப்போது சீனாவின் மக்கள்தொகை 132 கோடியுடன் வெகுதூரம் பின்னால் இருக்கும்.

சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா?

மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள மாநிலங்களில், அதைக் குறைப்பது அத்தியாவசியம். ஆனால், அதைச் சட்டங்களாலும் கட்டுப்பாடுகளாலும் சாதித்துவிட முடியாது. சீனா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஐ.நா.வின் மக்கள்தொகை தினக் குறிக்கோள்களில் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், வறுமை ஒழிப்பு, உடல் நலம், மனித உரிமை முதலான மக்கள் நல அம்சங்கள்தான் முன்னுரிமை பெறுகின்றன. பெண்களுக்குத் தடையின்றி கல்வியும் சுகாதாரமும் கிடைக்கிற எல்லாச் சமூகங்களிலும், குடும்பங்கள் சிறிதாகத்தான் இருக்கின்றன.

உழைக்கும் கரங்கள்

இன்னொரு முக்கியச் செய்தியும் உண்டு. 2020இல் இந்தியாவில் 90 கோடி பேர், மக்கள்தொகையில் மூன்றில் இருவர் உழைக்கும் வயதினராக (15-64) இருந்தனர். 2030இல் இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி உயரும். இந்தியாவின் கருவள விகிதம் குறைந்து வருகிறபோதும், இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் இந்த மாயம் நிகழ்கிறது. 2030இல் உலகில் உழைக்கும் வயதினரில் நான்கில் ஒருவர் இந்தியராக இருப்பார்.

ஆனால் இந்த எண்ணிக்கை மட்டுமே சோறு போடாது. இந்தப் பெரும்திரளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நமது தொழிலாளர்களில் கணிசமானவர்கள் கூலித் தொழிலிலேயே காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.

இதை மாற்ற முடியும். இந்தியப் பிரதமரின் கனவுத் திட்டமான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதை நனவாக்க முடியும். 2020 முதல் 2030 வரையான காலகட்டத்தை இந்தியாவின் பொற்காலமாக மாற்ற முடியும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியான CII அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

இப்போதைய உலகச்சந்தை, தொழில் துறையையும் சேவைத் துறையையும் சார்ந்திருக்கிறது. நமது இளைஞர்கள் அதற்குத் தக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாட்டில் எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கிடைக்க வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்குக் கல்வியும் மருத்துவமும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அப்போது உலகச் சந்தைக்குத் தேவைப்படும் தொழிற்சாலைகளும் சேவை மையங்களும் இந்தியாவெங்கும் உருவாகும்.

கல்வியில் சிறந்த, உடல்நலம் மிக்க சமூகம் பொறுப்புணர்வுமிக்கதாகவும் இருக்கும். அங்கே கருவள விகிதம் குறைவாக இருக்கும். அங்கே சாதி, மதச் சண்டைகள் இராது. வளர்ச்சியடைந்த மாநிலங்களின் வளம், வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்படாது. அங்கே மக்கள்தொகை சாபமாக அல்ல, வரமாக இருக்கும்.

> இது, பொறியாளர் மு.இராமனாதன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்