பற்களுக்கு வேர் சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றிப் பலருக்குத் தெரியாது. இருந்தாலும்கூட, வேர் சிகிச்சை (ரூட் கெனால்) என்றவுடன் அச்சத்துக்கு உள்ளாவதே பொதுவான போக்காக இருக்கிறது.
நமக்கு உதவுவதே வேர் சிகிச்சையின் உண்மையான நோக்கம். அது வலியை அகற்ற உதவும்; ஒருபோதும் வலியை அதிகரிக்காது; காயத்தைக் குணப்படுத்தும்; ஒருபோதும் புதிய காயத்தை ஏற்படுத்தாது. அதனால்தான், நீங்கள் அடிக்கடி பல் வலி என்று பல் மருத்துவரிடம் செல்லும்போது, அவர் உங்களுக்கு வேர் சிகிச்சையைப் பரிந்துரைக்கிறார்.
பல்லுக்குள் இருக்கும் பாக்டீரியத் தொற்றை அகற்றி, எதிர்காலத்தில் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதே இந்த சிகிச்சையின் முதன்மை இலக்கு.
எது சிறந்த அணுகுமுறை?
வேர் சிகிச்சை ஏன் செய்ய வேண்டும்? பல் சொத்தை அல்லது பல்லில் பாதிப்பு எற்பட்டால், அந்தப் பல்லைப் பிடுங்கி எறிந்து விடலாமே? அதில் வலியும் குறைவு; செலவும் குறைவு என்று கருதும் போக்கும் பலரிடம் உள்ளது. ஆனால், அது ஒரு தவறான அணுகுமுறையே.
பற்கள், இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வரம். நமது இயற்கையான பற்களை முடிந்தவரைக் காக்க முயல வேண்டும். எனவே, ஒரு பல்லைப் பிடுங்குவது முற்றிலும் தேவையற்றது. வேர் சிகிச்சை என்பது நவீன மருத்துவ அறிவியலின் விளைவு.
சிகிச்சை முறை
பல் வேர்களின் வடிவத்தைப் பார்க்கவும், சுற்றியுள்ள எலும்பில் நோய்த்தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து பல் மருத்துவர் தீர்மானிப்பார். ஈறுகளில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்னரே வேர் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதால், அந்த சிகிச்சையின்போது எவ்வித அசௌகரியமோ வலியோ தெரியாது.
சிகிச்சையின்போது, சிறிய துளையிடும் கருவியின் மூலம் பல்லின் மேற்பரப்பு திறக்கப்பட்டு, பல்லினுள் இருக்கும் கூழ் அகற்றப்படும். பின்னர் தொற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும். நோய்த் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட உடன், அந்த வெற்றிடம் ‘கட்டா பெர்ச்சா பிசின்’, ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் கலந்த வேதிப்பொருளைக் கொண்டு நிரப்பப்படும்.
வேர் சிகிச்சைக்குப் பின்னர் பல்லில் ஏதேனும் சேதம் அல்லது சிதறல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு, கிரீடம் எனப்படும் மேல் மூடி பொருத்திக்கொள்வது அவசியம்.
உங்கள் பல்லின் நிலை, தனிப்பட்ட சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு அமர்வுகளில் இந்த வேர் சிகிச்சையை முழுவதும் முடித்துவிட முடியும்.
இதற்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் உணவைக் கடித்து மெல்லும் வலுவை வாழ்நாள் முழுவதும் வழங்கும். வாழ்நாள் முழுவதும் வலியின்றி சிரிக்கும் நிலையைப் பரிசளிக்கும்.
> இது, வாய்வழி நோயியல் நிபுணர் ஹெச்.தமிழ்ச்செல்வன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago