பணக்காரர்கள் - ஏழைகள்: அதிகரிக்கும் இடைவெளியும் ஏற்றத்தாழ்வுகளும்

By செய்திப்பிரிவு

இந்திய மக்கள்தொகையைப் பொறுத்தவரை மேல்தட்டில் உள்ள 10 சதவீதத்தினரின் மொத்த சம்பாதியத்தையே அடித்தட்டில் வாழும் 64 சதவீதத்தினர் வருமானமாகப் பெறுகிறார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு 10 சதவீதத்தினருக்கு மட்டுமே செல்கிறது.

இப்படியாக பணக்காரர்கள்-ஏழைகள் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு உலக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப் பெரிதாக வளர்ந்துகொண்டே வருகிறது. கரோனா பெருந்தொற்று அதை மேலும் மோசமாக்கியுள்ளது.

கோடீஸ்வர்கள் அதிகரிப்பு: இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகக் கோடீஸ்வரர்கள் வாழும் நாடு இந்தியா. 2022 நிதியாண்டில் மட்டும் இவர்களுடைய சொத்து 26 சதவீதம் வளர்ந்துள்ளது. இவர்களில் 18 பேர் உலகின் முதன்மை 500 கோடீஸ்வரர்களின் பட்டியலிலும், முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். ஒரு வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த 18 கோடீஸ்வரர்கள் உலகப் பட்டியலில் இடம்பிடிக்க முடிகிறதென்றால், தவறு எங்கே நிகழ்கிறது? நாட்டின் வளர்ச்சி யாருக்குப் பலனளிக்கிறது என்கிற கேள்வி எழுவது இயல்பு.

யாருக்கான வளர்ச்சி: பொருளாதார வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்கிறோம். பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளைவிட வளர்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருக்கும் பொருளாதார வசதியற்றவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி இருக்கின்றனவா? “அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் சென்று சேர்வதைத் தடுத்து, நிலவிவரும் ஏற்றத்தாழ்வை மறைப்பதற்குப் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சி பெரும்பாலான நேரம் பயன்படுகிறது” என்கிறார் பாரிஸ் பொருளாதாரப் பள்ளியில் செயல்பட்டுவரும் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குநர் லூகாஸ் சான்செல்.

தலைமுறைக்கும் தொடரும் வறுமை: பரம்பரைச் சொத்தாகப் பணமும் நிலமும் கிடைப்பதே பொதுவானதொரு பிம்பமாக இருக்கிறது. ஆனால், ஏழைகள் வறுமையையே தங்கள் வாரிசுகளுக்கு பரம்பரைச் சொத்தாக விட்டுச்செல்கிறார்கள். உலக மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதம் பேருக்கு பிறக்கும்போது எந்தச் சொத்துமே கிடையாது.

இறக்கும்போதும் அதே நிலையே தொடர்கிறது. இந்தப் பின்னணியில்தான் அரசின் நேரடிப் பண உதவிகள், வருமான உத்தரவாத வாய்ப்புகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பொருளியல் நிபுணர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். இந்திய அரசமைப்பில் ஒருவர் இந்நாட்டில் வாழ்வதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தாக வேண்டிய தருணமிது.

> இது,ஆதி வள்ளியப்பன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்