சொமேட்டோ Vs நேரடி உணவு ஆர்டர் கட்டண வித்தியாசத்தை பகிர்ந்த நெட்டிசன்: வைரலான காரசார விவாதம்

By எல்லுச்சாமி கார்த்திக்

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஆஃப்லைனில் உணவகத்தில் நேரடி உணவு ஆர்டருக்கான கட்டண வித்தியாசம் குறித்த விவரத்தை அதற்கான ரசீதுடன் பகிர்ந்துள்ளார் நெட்டிசன் ஒருவர். இது இணையவெளியில் காரசாரமான விவாதப் பொருளாகி உள்ளது. அது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.

இன்றைய ஸ்மார்ட்டான உலகில் நமக்கு பிடித்த உணவு, நமது வீட்டு வாசல் தேடி வந்து டெலிவரி செய்து செல்லும் ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் சேவையை பெரும்பாலான நகரவாசிகள் இருகரம் நீட்டி வரவேற்று, அதற்கு அமோக ஆதரவு வழங்கி வருகிறோம். குறிப்பாக, நமக்கு பிடித்த உணவகத்தில் அந்த உணவை ஆர்டர் செய்யும் ஆப்ஷனை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. நாமும் கைபேசியை அற்புத விளக்காக பயன்படுத்தி தொடுதிரையில் விரல் நுனிகளில் தேய்த்து அதை ஆர்டர் செய்து, அந்த உணவு ஆவி பறக்க டெலிவரியும் பெறுகிறோம். அப்படி பிடித்த உணவை ஆர்டர் செய்யும் உற்சாக மிகுதியில் அதற்கு சரியான கட்டணத்தை தான் நாம் செலுத்துகிறோமோ என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை.

ஆனால், அதை கவனித்த சொமேட்டோ பயனர் ஒருவர், இப்போது சமூக வலைதளத்தின் ஊடாக அதனை வெளிக்கொண்டு வந்துள்ளார். அதுவும் சொமேட்டோ மற்றும் உணவகத்தில் நேரடி உணவு ஆர்டருக்கான கட்டண வித்தியாசத்தை தனது பதிவில் பகிர்ந்துள்ளார் அவர்.

அதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் ஆன்லைன் வழியே சொமேட்டோவிலும், ஆஃப்லைன் வழியே நேரடியாகவும் ஒரே உணவை வாங்கியுள்ளார். பின்னர் அந்த இரண்டு ஆர்டர்களுக்குமான கட்டண விவரம் அடங்கிய ரசீதை பகிர்ந்துள்ளார். அதோடு, அதில் தான் கண்ட விலை வித்தியாசத்தை மேற்கோள் காட்டியுள்ளார். அந்த நெட்டிசனின் பெயர் ராகுல் காப்ரா என தெரிகிறது. அவர் மும்பையில் இயங்கி வரும் உணவகத்தை அடிப்படையாக வைத்து இந்த ஒப்பீட்டை மேற்கொண்டுள்ளார்.

"உணவை விற்பனை செய்து வரும் உணவகத்தை காட்டிலும் அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட விரும்புகிறது சொமேட்டோ. அதற்கான ஆதாரம் இது" என தனது பதிவை தொடங்குகிறார் ராகுல்.

"எனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஒப்பீட்டில் நான் தெரிந்து கொண்டது. ஆஃப்லைன் ஆர்டருக்கு ரூ.512 கட்டணமும், அதுவே சொமேட்டோ மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்ததற்கு ரூ.690 கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைனை காட்டிலும் ஆன்லைனில் 178 ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்க பட்டுள்ளது. இவ்வளவு கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டுமா?

| வாசிக்க > டீ விலை ரூ.20 + சேவை கட்டணம் ரூ.50: மொத்தம் ரூ.70 செலுத்திய ரயில் பயணி | விளக்கம் கொடுத்த ரயில்வே |

இந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். சொமேட்டோவில் அதிகக் கட்டணம் செலுத்துவதை அறிபவர்கள் அதனை தவிர்த்துவிட்டு, அதற்கு மாற்றாக உள்ள நிறுவனங்களுக்கு சென்று விடுவார்கள்" என தெரிவித்துள்ளார் அவர். சக பயனர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கமெண்ட் மூலம் பகிரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவை அவர் LinkedIn தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு 10,000-க்கும் மேற்பட்ட லைக்குகளும், சுமார் 1443 கமெண்ட்டுகளும் குவிந்துள்ளது.

Loading...

அவரது பதிவுக்கு வந்த கமெண்ட்டுகள் சில…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்