“கொஞ்சம் காரமா கொடுங்க” - தமிழில் உணவு ஆர்டர் செய்த அமெரிக்க யூடியூபர் | வைரல் வீடியோ

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அங்குள்ள உணவகத்தில் தமிழில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதற்காக அந்த உணவக உரிமையாளர் அவருக்கு உணவை இலவசமாக வழங்கியுள்ளார். அந்த வீடியோ இப்போது பரவலாக கவனம் ஈர்த்து வருகிறது. என்ன நடந்தது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப சாதனங்களின் துணை கொண்டு சாமானியர்களும் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதில் பிரதானமானது யூடியூப். இதில் ரெகுலராக வீடியோ பதிவு செய்து வருபவர்கள் யூடியூபர் என அறியப்படுகிறார்கள். அவர்கள் ஒருவர் தான் சியாமானிக் (Xiaomanyc). அமெரிக்காவை சேர்ந்தவர். யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் தான் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.

வழக்கமாக யூடியூபர் என்றால் வித்தியாசமான கன்டென்ட்டை கையில் எடுத்து பேசுவார்கள். அதன் மூலம் அவர்களது வீடியோவுக்கு ஒரு ரீச் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் அதற்கு காரணம்.

"உலகின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாக உள்ள தமிழ் மொழி இன்றும் மக்களிடையே பயன்பாட்டில் உள்ளதை நான் அறிந்து கொண்டதில் இருந்து தமிழ் மொழி மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. இந்தியா மற்றும் இலங்கையில் அதிகம் பேசப்பட்டு வரும் மொழி. அமெரிக்காவில் தமிழில் பேசுவது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ஆன்லைன் மூலம் தமிழ் கற்று வருகிறேன்.

தமிழில் உரையாடும் நோக்கில் அமெரிக்காவில் தமிழர்கள் நடத்தும் உணவகத்திற்கு சென்றேன். அங்கு இருக்கும் உணவக உரிமையாளர், ஊழியர் என அனைவரிடத்திலும் தமிழில் பேசினேன்" என தெரிவித்துள்ளார் சியாமானிக்.

சுமார் 11 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். பல்லாயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அமெரிக்கர் ஒருவர் தமிழில் பேசுவதை கேட்டதும் அந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் ரியாக்‌ஷன் இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ இங்கே...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்