கடந்த ஆண்டு கரோனாக் காலத்தில் கேரளத்தில் கொல்லம் அருகே விஸ்மயா என்னும் 22 வயதுப் பெண் வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். கேரளத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் உலக்கியது இந்தச் சம்பவம். இது நடந்து 11 மாதம் இரு நாள்கள் ஆன நிலையில் விஸ்மயாவின் கணவர் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்துள்ளது கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
சமூகத்தில் பல நிலைகளில் இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட்டுள்ளது. வரதட்சிணை கொடுமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு எனப் பலரும் கருத்துத் தெரிவித்துவருகிறார்கள். ஆனால், மிகப் பழமையான இந்த வழக்கத்தை இந்த ஒரே ஒரு தண்டணை மூலம் அடியோடு துடைத்தழிக்க முடியுமா என்பது விடை காணாக் கேள்விதான்.
விஸ்மயா வழக்கு விசாரணையில் தீர்ப்புக்காக நடந்த வாதப் பிரதிவாதத்தில் விஸ்மயாவின் கணவர் தரப்பு வழக்கறிஞர் சொன்ன ஒரு வாக்கியம்: ‘சூரியனுக்குக் கீழ் இது முதல் வரதட்சிணை மரணம் அல்ல’. இது பெரும் சர்ச்சை ஆனது.
ஆனால், உண்மையில் விஸ்மயா தொடக்கம் அல்ல. அவருக்கும் முன்பும் பலர் இறந்திருக்கிறார்கள். பின்பும் இறக்கக்கூடும். அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?
» இந்தியாவில் கேம் கன்ட்ரோலரை அறிமுகம் செய்த ஜியோ | விலை & அம்சங்கள்
» அரசு அலுவலகங்களில் ஆய்வுகள் தொடரும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
விஸ்மயா வழக்கையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவரது எதிர்காலத்தின் மீது அவருடைய பெற்றோர் கொண்டிருந்த அக்கறையும் கேள்விக்கு உள்ளாகிறது. பெண் குழந்தைகளை, வளர்ப்பதே கட்டிக்கொடுப்பதற்குத்தான் என்கிற பொது மனநிலைதான் பரவலாக இருக்கிறது. திருமணம் அவர்களது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், திருமணத்துக்காகவே அவர்களை வளர்ப்பது எப்படி சரியாகும்?
முறையான கல்வி, சமூகத்தில் தனித்தியங்கும் திறன் போன்றவற்றைக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. ஆனால், பெண் குழந்தைகளை அச்சத்தின் காரணமாக நாம் பொது வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்துவதே இல்லை.
கைகொடுக்கும் கல்வி: விஸ்மயா, கல்லூரி இறுதி ஆண்டு படித்தபோதே அவருக்குத் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை என அவருடைய தந்தை சொல்லியிருக்கிறார். படித்து முடிக்கத்தான் அவர் விரும்பியிருக்கிறார். இருபுறமும் நிராகரிக்கப்படும்போது அந்தக் கல்வி அவருக்கு ஒரு கரையாக இருந்திருக்கலாம். வேலைவாய்ப்பு என்கிற புதிய வாசல் திறக்கப்பட்டிருக்கலாம். கணவரின் வன்முறையை எதிர்கொண்ட காலகட்டத்தில் தன் தோழியருடன் பேசியபோது படிப்பை முடிக்காமல் திருமணம் செய்துகொள்ளாதீர்கள் எனச் சொல்லியிருக்கிறார் விஸ்மயா.
இரண்டாவது விஷயம், கணவர் வீட்டில் அனுபவித்த பிரச்சினைகளைத் தன்னுடைய தந்தையிடம் உடைந்த குரலில் சொல்லி அழுதிருக்கிறார். “நான் இந்த வீட்டில் இருந்தால், இல்லாமல் போய்விடுவேன்” எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு சராசரி தகப்பனான அவருடைய தந்தை, “வாழ்க்கை அப்படிப்பட்டதுதான் மகளே” என மகளுக்குச் சமாதானம் சொல்லியிருக்கிறார். இது நடந்த சில நாட்களில் அந்த மகள் இல்லாமல் போய்விட்டார்.
> இது, ஜெயகுமார் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago