பெண்கள் மீதான வன்முறைகளுக்கு 82%  காரணம் கணவர்களே

By ஆர்.ஜெயக்குமார்

திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு 82 சதவீதம் கணவன்மார்தான் காரணம் எனத் தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் உறவினர்களால்தான் (39.3%) நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு அடுத்தபடியாக ஆண் நண்பர்களும் (16.1) குடும்ப நண்பர்களும் (11.7) திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குப் பொறுப்பாகிறார்கள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் 77 சதவீதம்பேர் அதைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. அதைச் சகித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். அதுபோல் உடல் ரீதியில் பாலியல் ரீதியில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் வெறும் 14 சதவீத்தினர் மட்டுமே வெளி உதவியை நாடுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 77 சதவீதம் பெண்கள் தனக்கு நிகழும் கொடுமைகள் பற்றி வாய் திறப்பதே இல்லை என அந்த அறிக்கை கூறுகிறது.


திருமணமான பெண்களில் 18-49 வயதுக்கு உட்பட்டவர்கள் 15 வயதிலிருந்தே உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகிறார்கள். இவர்களை வன்முறைக்கு உள்ளாக்குவதில் 84 சதவீதம்பேர் அவர்களது கணவன்மாராக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் மீது அவர்களது தாய், மாற்றாந்தாய் 59 சதவீதம் வன்முறையைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தந்தை, மாற்றாந்தந்தை, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் முறையே 37, 27, 9 சதவீதம் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பவர்களாக இருக்கிறார்கள்.

கணவன்மாரால் நிகழ்த்தப்படும் வன்முறை அதிகமாக நடக்கும் மாநிலமாக கர்நாடகம் இருக்கிறது. 48 சதவீதம் பேர் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். பீகாரும் தெலுங்கானாவும் முறையே 43, 41 சதவீதம் என அடுத்த இரு இடங்களில் இருக்கிறது. தமிழ்நாடும் மணிப்பூரும் வன்முறை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 40 சதவீதத்துடன் நான்காம் இடத்தில் இருக்கின்றன.

வன்முறையில் ஈடுபடும் கணவன்மாரில் பலரும் 70 சதவீதம் பேர் மது அருந்தியவர்ளாக இருக்கிறார்கள். கணவன்மாரால் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் 59 சதவீதம்பேர் கணவருக்குப் பயப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

23 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

மேலும்