ரூ.100 அபராதம் தவிர்க்க... குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது எப்படி?

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னையில் குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், எது மக்கும் குப்பை, எது மக்காத குப்பை, எவ்வாறு குப்பைகளைத் தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்பது தெரிந்து குறித்து பார்ப்போம்.

மக்கும் குப்பை: உணவுக் கழிவுகள், காய்கறிகள், தேயிலை இலைகள், உணவுக் குப்பைகள், இறைச்சி எலும்புகள், தேங்காய் மூடி, உலர்ந்த இலைகள், சருகுகள், வீட்டு தூசி மற்றும் சாம்பல் முதலானவை.

மக்காத குப்பைகள் : பிளாஸ்டிக், கண்ணாடி, மரச்சாமன்கள், பர்னிச்சர்கள், ரப்பர், செய்தித்தாள்கள், வார இதழ்கள், உலோகத்தாலான பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியும். டயர்களை மறுசுழற்சி செய்ய முடியாது.

அபாயகரமான குப்பைகள்: மருத்துவக் கழிவுகள், மருந்து பாட்டில்கள், ஊசிகள், எண்ணெய் கேன்கள், டின்கள், பசைகள், வண்ணப்பூச்சுகள், சுத்தம் செய்யும் திரவ பாட்டில்கள், பேட்டரிகள், பல்புகள், கம்பிகள், பி.வி.சி பொம்மைகள் முதலானவை.

தரம் பிரித்தல்: வீடுகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு தொட்டியில் மக்கும் குப்பை மற்றும் மற்றொரு தொட்டியில் மக்காத குப்பைகள் அளிக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை மஞ்சள் பைகளில் தனியாக சேகரித்து வைக்க வேண்டும். ஒரு தொட்டி பயன்படுத்தினால் தூய்மைப் பணியாளர்களிடம் அளிக்கும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து இரண்டு கவர்களில் அளிக்க வேண்டும்.

அளிப்பது எப்படி: சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் சிவப்பு மற்றும் பச்சை தொட்டிகள் இருக்கும். இதில் மக்காத குப்பைகளை சிவப்பு தொட்டியிலும், மக்கும் குப்பைகளை பச்சை தொட்டியிலும் போட வேண்டும். ஊழியர்கள் சரியாக குப்பை பிரித்து போடுகீறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE