அப்பாக்களை காட்டிலும் அம்மாக்களே குழந்தைகளுக்கு ‘பாக்கெட் மணி’ அதிகம் கொடுக்கிறார்கள்: சர்வே முடிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அப்பாக்களை காட்டிலும் அம்மாக்களே குழந்தைகளுக்கு பாக்கெட் மணி (Money) அதிகம் கொடுப்பதாக சர்வே முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. வரும் ஞாயிறு (மே 8, 2022) அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தாய்மார்களுக்கு இது சந்தோஷம் கொடுக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஜூனியோ (Junio). இதுவொரு நிதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஸ்டார்ட்-அப் முயற்சி தொடங்கப்பட்டது. இன்றைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுக்கும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது இந்நிறுவனம். இதன் மூலம் அனைத்தும் ஆன்லைன் மயமாகி உள்ள டிஜிட்டல் பேமெண்ட் சூழ் உலகில் குழந்தைகள் தடையின்றி பாக்கெட் மணி பெற உதவுகிறது ஜூனியோ.

அதோடு குழந்தைகள் அதனை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கண்காணிக்க இந்த செயலி உதவுகிறது. இந்நிலையில், பெற்றோர்களில் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி அதிகம் கொடுப்பது யார்? என சர்வே ஒன்றை நடத்தி உள்ளது ஜூனியோ. சுமார் லட்சம் பேர் இந்த சர்வேயில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த பதில்களின் அடிப்படையில் அதன் முடிவை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அம்மாக்கள் சராசரியாக குழந்தைகளுக்கு 1500 ரூபாய் கொடுப்பதாகவும், அப்பாக்கள் 1100 ரூபாய் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சேமிப்பு, மாதாந்திர பட்ஜெட், செலவுகளை கட்டுப்படுத்துவது மற்றும் அனைத்து வரவு செலவு கணக்கையும் கண்காணிப்பது போன்ற நிதி சார்ந்த நிர்வாகத் திறனிலும் குழந்தைகளுக்கு அம்மாக்கள் பயிற்சி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது ஜூனியோ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

16 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்