உ.பி: வசதியற்ற இந்துப் பெண்ணின் திருமணத்தை தங்கள் வீட்டில் நடத்தி நெகிழவைத்த இஸ்லாமிய குடும்பம்

By செய்திப்பிரிவு

லக்னோ: இந்த ரம்ஜான் மாதத்தில் தங்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இந்து பெண்ணின் திருமணத்தை தங்களது வீட்டில் வைத்து, தங்களது இல்லத்தின் சொந்தத் திருமணம் போல் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமிய குடும்பம்.

முதல் கொரோனா அலையில் தன் தந்தையை இழந்தவர்தான் மணப்பெண் பூஜா. மிகச் சிறிய வீட்டில் பூஜாவின் குடும்பம் வசித்து வந்தது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத் தேதி ஏப்ரல் 22 என உறுதி செய்யப்படடது. திருமணத்திற்காக அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டனர், பூஜா குடும்பத்தினர். ஆனால், திருமண மண்டபம் ஏற்பாடு செய்ய போதிய பணம் இல்லாம் இருந்துள்ளனர்.

பூஜாவின் உறவினர் கூறும்போது “எங்களால் மண்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதற்குத் தேவையான பணம் எங்களிடம் இல்லாததால் குழம்பித் தவித்தோம். அப்போது எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பர்வேஸிடம் இதுகுறித்து சொன்னேன். அவரின் வீட்டு முற்றத்தில் திருமணத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் வைத்துகொள்ளச் சொன்னார். மேலும், அவர்கள் ஒரு மண்டபத்தை போல் அவர்கள் வீட்டை அலங்கரித்தனர். விருந்தினர்களுக்கு ஏற்றவகையில் இருக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருமண நாள் அன்று பர்வேஸும் அவர் மனைவியும் விருந்தினர்களை தங்கள் வீட்டு திருமணம் போல் வரவேற்றனர். அவர்கள் வீட்டு ஆண்கள் விருந்தினர்களை கவனித்துக்கொண்டனர். பெண்கள் திருமணத்திற்கான பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர். மேலும், அவர்கள் பாரம்பரியமிக்க உணவு மற்றும் பரிசுகளை விருந்தினர்களுக்குக் கொடுத்தனர். மொத்தத்தில் பூஜாவை தங்கள் மகள் போல் நினைத்து அனைத்தையும் சிறப்பாகவும் முழு மனதோடும் செய்தனர்.

பர்வேஸின் மனைவி பேசும்போது “ பூஜாவை எங்கள் மகளாகதான் நினைக்கின்றோம். இந்தப் புனிதமான மாதத்தில் பூஜாவின் திருமணம் இங்கு நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் தான். ஆனால், பூஜாவின் திருமணத்தில் எங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள்
அனைவரின் நோக்கமாக இருந்தது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

57 mins ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

27 days ago

மேலும்