காதல் ஒரு நெருப்பு. ஆனால்... - புரிதலுக்கு உதவும் காதல் தத்துவங்கள் | Valentine's Day பகிர்வு

By செய்திப்பிரிவு

உலகின் அற்புதமான ஓவியக் கலைஞன் வின்சென்ட் வான்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பாப் பாடகர், பாடலாசிரியர் பாப் டிலன் வரை காதலைப் புரிந்துகொண்ட விதம் தனித்துவமானது. காதலில் தத்துவங்கள் நிறைந்திருப்பதைப் போலவே தன்னம்பிக்கையும் மிளிரும் பண்பட்ட சர்வதேச காதல் பொன்மொழிகள் சிலவற்றுள் இங்கே:

காதல் என்றும் அழியாதது - ஆளாளுக்கு காலத்திற்குக் காலம் அதன் அம்சம் மாறக்கூடும். ஆனால், சாராம்சம் அல்ல. ஒரு நபர் காதலிக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் ஒரு விளக்கு சும்மா இருப்பதற்கும் எரியும் விளக்காக இருப்பதற்குமான வித்தியாசத்தைக் கொண்டிருப்பார். அது நல்ல விளக்குதான். ஆனால், காதல் என்று ஒன்று வந்தபிறகே அது வெளிச்சத்தை சிந்தும் விளக்காக மாறுகிறது. அதுதான் அதன் உண்மையான செயல்பாடு. பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபடும் ஒருவரை அமைதியின் வழியில் ஒழுங்குபடுத்துவது காதல்தான். அவ்வகையிலேயே அவர் எந்த ஒரு வேலைக்கும் பொருத்தமானவராக மாறுகிறார்.

ஒரு உண்மை என்னவெனில், காதல் இல்லாமல் நான் உயிர் வாழ முடியாது.

- வின்சென்ட் வான்கா

நாம் புரிந்து கொள்ளாததால் நாம் நேசிப்பதில்லை அல்லது நாம் நேசிக்காததால் புரிந்துகொள்ளவில்லை. நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் இறுதி அர்த்தம் அன்பு மட்டுமே. இது வெறும் உணர்வு அல்ல; எல்லா படைப்புகளின் மூலத்திலும் இருக்கும் மகிழ்ச்சி அது.

- ரவீந்திரநாத் தாகூர்

ஒருவர் உங்கள் காதலுக்காக உங்கள் முன் நின்றுகொண்டிருக்கும்போது நீங்கள் ஏன் வேறு ஒருவருக்காக காத்திருக்க வேண்டும்.

- பாப் டிலன்

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பெரிய அளவில் கவனித்துக்கொள்கிறான் என்பதால் அல்ல, நேசிப்பதாலேயே உயிர் வாழ்கிறான் என்பதையே நான் வாழ்விலிருந்து கற்றுக்கொண்டதாகும்.

- லியோ டால்ஸ்டாய்

நாம் நேசிக்கும்போது, நம்மை விட சிறந்தவர்களாக மாற எப்போதும் முயற்சி செய்கிறோம். நம்மை விட சிறந்தவர்களாக மாற நாம் முயலும்போது, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் சிறப்பாகின்றன.

- பாலோ கோயலோ

ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்கு பலத்தைத் தருகிறது, அதே நேரத்தில் ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்கு தைரியத்தைத் தருகிறது.

- லாவோ சூ

காதலில் விழுந்ததற்கு ஈர்ப்பு விசையை நீங்கள் குறைகூற முடியாது.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வாழ்க்கை என்பது மலர், அதிலிருந்து கிடைக்கும் தேன் காதல்.

- விக்டர் ஹ்யூகோ

அன்பைக் கொடுப்பதும் ஒரு கல்விதான்.

- எலினோர் ரூஸ்வெல்ட்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் ஒருவரைக் கண்டால், தாமதிக்காமல் அவரிடம் அந்த அன்பைத் தொடங்குங்கள்.

- இளவரசி டயானா

உண்மையான காதல் கதைகளுக்கு முடிவே கிடையாது.

- ரிச்சர்ட் பாக்

காதல் என்பது இரண்டு உடல்களில் வசிக்கும் ஒற்றை ஆத்மாவால் ஆனது.

- அரிஸ்டாட்டில்

காதலில் எப்போதும் பித்துப் பிடிக்கும் தன்மை உண்டு. ஆனால் காரணமின்றி அல்ல, அதற்கு எப்போதும் சில காரணங்களும் உள்ளன.

- பிரெட்ரிக் நீட்சே

அன்பு உங்கள் ஆன்மாவை அதன் மறைவிடத்திலிருந்து வலம் வரச் செய்கிறது.

- சோரா நீல் ஹர்ஸ்டன்

காதல் ஒரு நெருப்பு. ஆனால் அது உங்கள் அடுப்பைச் சூடேற்றுமா அல்லது உங்கள் வீட்டை எரிக்கப் போகிறதா என்பதை நீங்கள் ஒருபோதும் சொல்ல முடியாது.

- ஜான் க்ராஃபோர்ட்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்