உடல்பருமனால் தவித்த ஆந்தைக்கு தீவிர 'டயட்': எடை குறைப்புக்குப் பின் வனத்தில் விடுவிப்பு

By ஏஎன்ஐ

உடல்பருமனால் தவித்த ஆந்தை தீவிர டயட் சிகிச்சைக்குப் பின் வனத்தில் விடுவிக்கப்பட்டது.

பொதுவாக விலங்குகள், பறவையினங்கள் உடல் பருமனால் அவதிப்படுவதில்லை. ஆனால் இங்கிலாந்தில் சஃபோக் ஆந்தைகள் சரணாயலத்துக்கு கொண்டுவரப்பட்ட அந்த ஆந்தை வழக்கமான எடையைவிட மூன்று மடங்கு அதிக எடையுடன் இருந்துள்ளது. இந்தச் செய்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

மீட்கப்பட்ட ஆந்தைக்கு ப்ளம்ப் எனப் பெயரிட்ட சரணாலய ஊழியர்கள் அதை தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது, அதன் எடை சீரான நிலையில் அதனை வனத்தில் விடுவித்துள்ளனர்.

முன்னதாக சஃபோக் ஆந்தைகள் சரணாலயத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆந்தை ஒன்று எடை இயந்திரத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கும் புகைப்படமும் அதனுடன் ஒரு விளக்கமும் அடங்கிய இடுகை பதிவிடப்பட்டிருந்தது.

அதில், "இந்த ஆந்தையை சில வாரங்களுக்கு முன்னால் மீட்டோம். அது பறக்க இயலாத நிலையில் இருந்தது. அதற்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றே முதலில் கருதினோம்.

ஆனால், எடை பரிசோதனையில் அதன் எடை 245 கிராம் என இருந்தது. வழக்கமாக வளர்ந்த பெண் ஆந்தையின் சராசரி எடையைவிட இது மிகமிக அதிகம். அதனால், அதற்கு டயட் சிகிச்சை அளித்துவந்தோம். அதன் உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினோம். இப்போது அது சராசரி எடைக்கு வந்துவிட்டது. அதனால் அதை சுதந்திரமாக விடுவிக்கிறோம்.

பொதுவாக விலங்குகள், பறவைகள் உடல்பருமன் நோய்க்கு ஆட்படுவதில்லை. ஆனால் இந்த ஆந்தை அதிகப்படியான உணவு உட்கொண்டதால் உடல்பருமனுக்கு ஆளாகியிருக்கிறது. அது கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே அண்மைக்காலமாக அதிகளவில் எலிகள் இருந்துள்ளன.

அதனால் அந்த ஆந்தை அளவில்லாமல் இரையெடுத்து இந்த நிலைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்