கிரிக்கெட் பாலும் கீபோர்டும்!

By வா.ரவிக்குமார்

இளையராஜாவின் 76-வது பிறந்த நாளுக்காக அவர் இசையமைத்த சில பாடல்களின் மெட்டைக் கொண்டே ஓர் இசைத் தோரணம் கட்டியிருக்கிறார் கீபோர்ட் கலைஞர் ஜீவராஜா.

 ‘சரி, இதில் என்ன விசேஷம்?’ என நீங்கள் நினைக்கலாம். இருக்கிறது, ஜீவராஜா கீபோர்டில் விரல்களைக் கொண்டு வாசிக்காமல் கிரிக்கெட் பாலைக் கொண்டு வாசித்திருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியிருப்பதால், உலக அளவில் மிகச் சிறந்த கம்போஸர்களில் ஒருவரான இளையராஜாவுக்கு செய்யும் இசை ஆராதனையாக கிரிக்கெட் பந்தைக் கொண்டே வாசித்ததாகச் சொல்கிறார் ஜீவராஜா.

“பல நாட்கள் இதற்காகப் பயிற்சி செய்தேன். ஐந்து ஸ்வரங்களை மட்டுமே கொண்டுள்ள சில ராகங்களைப் பயன்படுத்தி இளையராஜா இசையமைத்த பாடல்களை  இதில் பயன்படுத்தியிருக்கிறேன். ‘கோயில் மணி ஓசை இங்கு...’, ‘விழியில் இருந்து இதயம் நுழைந்து...’, ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது...’,  ‘நின்னுக்கோரி வர்ணம்...’ போன்ற பாடல்களை பயன்படுத்திக் கொண்டேன்.

மோகனம், இந்தோளம், சுத்த தன்யாசி, மத்யமாவதி, சுத்த ஸாவேரி போன்ற ‘பென்டா டோனிக் ஸ்கேல்’ ராகங்களைப் பயன்படுத்தி இந்தப் பாடல்களுக்கு மெட்டமைத்திருப்பார் இளையராஜா. அந்த ராகங்களின் சாயலையும் ஒன்றிலிருந்து இன்னொரு ராகத்துக்கு தடம் மாறும் தருணங்களில் மட்டுமே என்னுடைய முயற்சியைச் செய்திருக்கிறேன்” என்கிறார் ஜீவராஜா.

நாம் கேட்டுப் பழகிய பாடல்களின் மெட்டுக்கு ஒத்திசைவாக ஒலிக்கும் புதிய சத்தங்களும் இனிமை சேர்க்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

20 hours ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்