ஒ
வ்வோர் ஆண்டும் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் (மார்ச் 8) கொண்டாடப்படுவது வழக்கமாகிவிட்டது. கல்லூரிகளில் கோலப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, ஒரே நிறத்தில் ஆடை அணிந்துவருவது என்பதோடு மகளிர் தினக் கொண்டாட்டம் முடிந்துவிடுகிறது. மகளிர் தினம் இன்றைய இளம் தலைமுறையினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? இந்தக் கால இளம் பெண்களின் சிந்தனை என்னவாக உள்ளது?:
கல்வியே எதிர்காலம்
இந்த நவீன யுகத்திலும் பெண்களின் நிலை சமையல் அறையோடு குறுக்கப்படுகிறது. பெண்களுக்கு முழுமையான கல்வி கொடுத்தாலே போதும், தங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை கொஞ்சமாவது குறைய வேண்டும் என்றால், பாலியல் கல்வியை ஆண், பெண் இருவருக்கும் வழங்க வேண்டும்” என்கிறார் கோவை சக்தி பொறியியல் கல்லூரி மாணவி காவ்யா.
வீட்டிலிருந்து மாற்றம்
பெண் என்றால் ஆண்களுக்கு அடங்கிதான் நடக்க வேண்டும் என்று என் வீட்டிலேயே சொல்கிறார்கள். முதலில் அம்மா, சகோதரிகளை ஆண்கள் மதித்து நடக்க வேண்டும். பெண்கள் வீட்டு வேலை செய்யும் மெஷின் இல்லை என்பதை வீட்டில் உள்ள ஆண்களுக்குப் புரியவைக்க வேண்டும். அப்போதுதான் மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்” என்கிறார் வெண்மணி பிரியா.
தடைகளைத் தாண்டு
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி காவ்யாவின் கருத்து வேறுவிதமாக உள்ளது. “என்னுடன் படிக்கும் ஆண் நண்பர்கள் பலர் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகள் குறித்து பேசும் நிலை உருவாகியுள்ளது” என்கிறார் காவ்யா. “நிறைய பெண்கள் படிக்க வந்திருந்தாலும் நான்கு பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து நடந்து செல்ல முடியாத சூழ்நிலைதான் உள்ளது.
02CHLRD_LAW KAVYA காவ்யாrightபெண்கள் தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஆணாதிக்க சிந்தனைகளை மாற்ற பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்த விவாதிக்க வேண்டும்” என்கிறார் அவர்.
பாதுகாப்பு வேண்டும்
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மாணவி ஜானகி கூறுகையில், “ ஒவ்வொரு மகளிர் தினத்தன்றும் பெண்கள் மீதான வன்முறை மீது தக்க நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லோரும் பேசிவிட்டுக் கலைகிறோம். ஆனால்,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
சமீபத்தில்கூட பெண் ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டபோது, அதற்குத் தீர்வாகப் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதுதான் பாதுகாப்பு என்ற கருத்து பலரிடம் இருந்தும் வெளிப்பட்டது. ஆனால், பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவதை விடுத்து இப்படிப் பேசுவது எந்த வகையில் நியாயம்? பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை இனியாவது மாற வேண்டும்” எனச் சொல்கிறார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago