அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் மட்டும் வலைப்பின்னல்கள் உருவாகவில்லை. மற்ற நாடுகளிலும் இணையத்துக்கு ஈடான வலைப்பின்னல்கள் உருவாக்கப்பட்டன. பிரான்சில் ‘மினிடெல்’ எனும் சேவை அறிமுகமாகியிருந்தது. இணைய ஷாப்பிங், பணப் பரிவர்த்தனை வசதி உள்ளிட்டவற்றை இந்த சேவை அளித்தது. பிரிட்டனிலும் ‘பிரெஸ்டல்’ எனும் பெயரில் இதேபோன்ற சேவை அறிமுகமானது.
தொலைபேசி, தொலைக்காட்சித் திரை போன்றவற்றை இணைத்துப் பயனாளிகளுக்கு ஆடியோ, வீடியோ வடிவில் செய்திகளை வழங்கும் வீடியோடெக்ஸ், ஆடியோடெக்ஸ் சேவைகளும் அறிமுகமாயின.
வெகுஜனமயமான வலை
ஆனால் மினிடெல், வீடியோடெக்ஸ் போன்ற சேவைகள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதேவேளையில் இணையம் முன்னேறிக்கொண்டிருந்தது. இணையம் உலகம் தழுவிய வளர்ச்சியைப் பெறுவதற்கான வழியை பிரிட்டன் கணினி விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ காட்டினார்.
அவர்தான் இணையத்தை வெகுஜனமயமாக்கிய வைய விரிவு வலையை (WWW) உருவாக்கினார். பெரும்பாலும் வரி வடிவில் தகவல்களை அணுகக்கூடிய நிலையையும் அவரது கண்டுபிடிப்பே மாற்றிக்காட்டியது.
இணையத்தை யாரும் எளிதாக அணுக வழிசெய்ததும், அதற்குப் பல் ஊடகத் தன்மையை அளித்ததும் வலையின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. முக்கியமாக இணையத்தை அணுகுவதற்கான எளிதான வழியை பிரவுசர் வடிவில் அவர் உருவாக்கிக் கொடுத்தார்.
1989 மார்ச் 12 அன்று டிம் பெர்னர்ஸ் லீ, வலை உருவாக்கத்துக்கான கருத்தாக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார். அப்போது அவர் சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். கணினி விஞ்ஞானியான டிம் பெர்னர்ஸ் லீ லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.
கணினி வித்தகர்கள்
கணினி வித்தகர்களான பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த அதே ஆண்டில்தான் (1955) இவரும் பிறந்தார். அவருடைய பெற்றோர்களும் கணினி விஞ்ஞானிகள்தாம். அவருடைய அம்மா, உலகின் முதல் வர்த்தகக் கணினியான மார்க் 1 உருவாக்கத்தில் பங்கேற்றிருக்கிறார்.
அவருடைய தந்தை கணினியைவிட மனித மூளை எப்படிச் சிறந்தது என அவரிடம் பாடம் எடுத்திருக்கிறார். எனவே, லீக்குக் கணினி சார்ந்த தொழில்நுட்பத்தில் அறிமுகமும் ஆர்வமும் இயல்பாகவே இருந்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1976-ல் இயற்பியல் பட்டம் பெற்ற லீ, தொலைத்தொடர்பு துறையில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு 1980-களில் செர்ன் ஆய்வுக்கூடத்தில் ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கினார். செர்ன் ஆய்வுக்கூடம் சுவிட்சர்லாந்துக்கும் பிரான்சுக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் அமைந்திருந்தது.
செர்ன் ஆய்வுக்கூடம் சர்வதேச அமைப்பு என்பதால் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களும் நூற்றுக்கணக்கான கணினி அமைப்புகளும் இருந்தன. இவற்றின் சிக்கலான தன்மையே லீயை யோசிக்கவைத்தது.
இதற்குத் தீர்வு காண முயன்ற லீ, தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான எளிதான வழியை உருவாக்கித்தர விரும்பினார். ஒரு எளிய கனவாக இது அவரது மனத்தில் உருவானது.
இந்த கனவை நினைவாக்க லீ மேற்கொண்ட முயற்சியே, முதல் பிரவுசரை உருவாக்கவைத்து, வைய விரிவு வலையை உலகுக்கு அளித்தது.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர்
தொடர்புக்கு: enarasimhan@gmail.com
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago