உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். தனி நபராக அவர் செய்த சாதனைகள் உலகக் கோப்பையில் தனித்துவமிக்கவை. உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளவரை சச்சினின் சாதனைகள் பேசப்படும். அவருடைய சாதனைகள்:
# உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆறு முறை பங்கேற்ற ஒரே வீரர் என்ற சிறப்பை பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத் மட்டுமே வைத்திருந்தார். அந்தச் சாதனையை 2011-ல் சச்சின் சமன் செய்தார். 1992 - 2011 வரை தொடர்ச்சியாக 6 தொடர்களில் பங்கேற்றார்.
# அதிகப் போட்டிகளில் பங்கேற்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்குக்கு முதலிடம். 46 போட்டிகளில் அவர் பங்கேற்றார். இரண்டாமிடம் சச்சினுக்கு. 45 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
# ஒட்டுமொத்தமாக அதிக ரன் அடித்த வீரர் சச்சின். மொத்தம் 2,278 ரன்களைக் குவித்துள்ளார். இதன் சராசரி 56.65.
# அதிக சதம் அடித்த வீரர் சச்சின் மட்டுமே. 6 சதங்கள் விளாசியுள்ளார் (3 முறை 90 ரன்களுக்கு மேல் அவுட் ஆனது தனி).
# அதிக அரை சதங்கள் அடித்த வீரரும் சச்சினே. 21 அரை சதங்கள் விளாசியுள்ளார்.
# ஒரே உலகக் கோப்பையில் அதிக அரை சதங்கள் அடித்தவர் சச்சின். 2003 உலகக் கோப்பையில் 7 அரை சதங்களை விளாசினார்.
# ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் சச்சினுக்கே முதலிடம். 2003-ல் 11 போட்டிகளில் விளையாடி 673 ரன்களைக் குவித்தார்.
# அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றவரும் இவரே. 9 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ள சச்சின், 2003-ல் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 hours ago
வாழ்வியல்
19 hours ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
17 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago