பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நான் ஐந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டும். மின்தூக்கி அருகே நான் சென்றபோது ஏற்கெனவே ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். மேலே செல்வதற்கான பட்டனை நான்கைந்து முறை அழுத்தினார்.
மின்தூக்கி வந்து சேரக்கூடிய பாதையை உற்று உற்றுப் பார்த்தார். கைக்கடிகாரத்தை வேறு அடிக்கடி பார்த்துக்கொண்டார். எங்கே செல்ல வேண்டும்? என்று கேட்டபோது, “இரண்டாவது மாடிக்கு” என்றார். அவ்வளவு டென்ஷனோடு அங்கு காத்திருப்பதற்குப் பதிலாக அவர் படிகளில் ஏறிச் சென்றிருக்கலாமே.
சரி, ஏதோ காரணத்தினால் மின்தூக்கியில்தான் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொண்டால்கூட மேலே செல்வதற்கான பட்டனை பலமுறை அழுத்த வேண்டிய அவசியம் என்ன? அதனால் மின்தூக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்து விடுமா?
வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எதிர்பார்த்தபடியோ எதிர்பாராமலோ இந்தக் காத்திருப்புகள் நடைபெறுகின்றன. படிக்க வேண்டுமெனத் திட்ட மிட்டிருந்த ஒரு புத்தகத்தை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் அதைப் படிக்கலாம்.
கைவசம் எப்போதும் ஒரு தாளும் பேனாவும் இருந்தால், நாளைக்கு என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதைத் எழுதிக்கொள்ளலாம். பிறர் அறியாமல் சின்னச்சின்ன உடற்பயிற்சிகளைக்கூடச் செய்யலாம் (வயிற்றுப் பகுதிகளை உட்புறம் இழுத்து பின் வெளிப்புறம் கொண்டு வருவதைப்போல). ஆக, காத்திருக்கும் நேரத்தில் டென்ஷன் உருவாகாது. நேரமும் பயனுள்ளதாகக் கழியும்.
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக்கூட உருப்படியாகச் செலவழிக்கலாம்.
(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago