வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களைப் போல இந்தியாவில் யாரும் இல்லையே என்ற ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. இன்றோ வேகப்பந்து வீச்சில் அசத்தும் நாட்டினரைக்கூட ஓரங்கட்டிவிட்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். அவற்றில் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த் சர்மா கூட்டணி ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணி என்ற முத்தாய்ப்பான சாதனையைப் படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளில் இருந்ததைப் போல இந்தியாவில் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி என்ற ஒன்று எந்தக் காலத்திலும் அமைந்ததே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டே வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. ஆனால், தற்போது மற்ற நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் உயர்ந்தது இந்த ஆண்டு நடந்தேறியது.
குறிப்பாக, இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களைத் தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலியா விலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் அமர்க்களப் படுத்தி வருகிறார்கள். வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான வெளிநாடுகளில், அந்த நாட்டு வீரர்களை இந்தியாவின் வேகங்கள் சாய்த்து அதிரடித்து வருகிறார்கள். இந்தியாவின் பும்ரா, முகம்மது ஷமி, இஷாந்த சர்மா கூட்டணி தொடர்ச்சியாகவே விக்கெட்டுகளை அறுவடை செய்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர்களான கார்னர், ஹோல்டிங், மார்ஷல் கூட்டணிதான் இதுவரை ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கூட்டணி என்ற சிறப்பைப் பெற்றிருந்தது. இந்தக் கூட்டணி 1984-ம் ஆண்டில் 130 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகித்து வந்தது. 34 ஆண்டுகால சாதனையைத் தற்போது இந்தியாவின் பும்ரா, ஷமி, இஷாந்த் கூட்டணி முறியடித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 134 விக்கெட்டுகளை (டிச. 29 நிலவரப்படி) வீழ்த்தி இந்தக் கூட்டணி முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் பும்ராவும் ஷமியும் தலா 47 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மோர்க்கல், மக்காயா நிட்னி, ஸ்டெயின் கூட்டணி 2008-ம் ஆண்டில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு பெரும் பாலும் இந்திய அணி வெளிநாடுகளில் தான் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் போட்டிகளின் மூலமே இந்திய வேகங்கள் இந்தச் சாதனையைப் படைத் திருப்பது, இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான தரமான ஒரு சம்பவம்தானே!
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
41 mins ago
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago