ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாது என்கிறார்கள். ஆனால், அப்படிப்பட்ட சூழலை நாம் அடிக்கடி உண்டாக்கிக் கொள்கிறோம் எனத் தோன்றுகிறது. மொத்தச் சேமிப்பையும் ஒரே நிறுவனத்தின் பங்குகள் வாங்குவதில் செலவிடலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா?
மிகப் பலரும் கூறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கும். “மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான் நல்லது. ஏனென்றால் பல நிறுவனங்களின் பங்குகளை அவர்கள் வாங்குவார்கள். ஒரு நிறுவனம் திவாலானால்கூடப் பிற நிறுவனங்களின் பங்குகள் கைகொடுக்கும்”.
சில நாட்களுக்கு முன்பு, நான் சந்தித்த நிகழ்வு இது.
மனிதவளப் பயிற்சியை வேறொரு நகரில் நடத்துவதற்காக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார். இப்போதெல்லாம் அவர் உயர் வகுப்பு டிக்கெட்டையோ டிக்கெட் தகவல் அடங்கிய குறுஞ்செய்திகளையோகூடக் கேட்பதில்லை. ஆனால், அடையாள அட்டையைக் காட்டியாக வேண்டும்.
எதிரில் இருந்த ஒருவர் பதறினார். “என் பர்ஸ் தொலைந்துவிட்டது” என்றார்.
அந்த பர்ஸில்தான் அவர் ரொக்கத் தொகையை வைத்திருந்தார். டிக்கெட், ஒட்டுநர் உரிமத்தை வைத்திருந்தார். அத்தனையும் ஒட்டு மொத்தமாகப் பறிகொடுத்து விட்டார்.
அவர் மட்டுமல்ல நம்மில் பலரும் இப்படி ஒரே பர்ஸில்தானே பலவற்றையும் வைத்துக் கொள்கிறோம்? இது தவறு. ஆங்கிலத்தில், “Do not put all your eggs in one basket” என்பார்கள் (இந்த வாக்கியம் மிகுவெல் செர்வென்டெஸ் எழுதிய Don Quixote என்ற புதினத்தில் இடம் பெறுகிறது. இது ஒரு ஸ்பானிய நாவல். அலோன்சோ என்ற பாத்திரத்திம் பயண அனுபவங்கள்தான் இந்த நூலின் கரு).
சுனாமியில் தன் வீட்டை இழந்த ஒருவர், “அத்தனை சேமிப்பையும் இந்த ஒரு வீட்டைக் கட்டுவதற்காகச் செலவழித்தேன். கடன் வேறு வாங்கினேன். அத்தனையும் பறிபோய் விட்டதே” என்று கதறியதைக் கண்டிருக்கிறேன்.
மகன் இறந்தவுடன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்த ஒரு அப்பாவையும் எனக்குத் தெரியும். “எனக்கு அவனை விட்டால் இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்றார். உச்சகட்ட விரக்தியில் அன்பும் பாசமும் ஒருவர்மீது மட்டும் இருக்க வேண்டாமே. பரவலாக்கினால் பலவிதங்களில் நல்லது. யோசிக்க யோசிக்க நான் இப்படிக் கூறுவதற்கான காரணம் உங்களுக்கு விளங்கும்.
(மாற்றம் வரும்) | ஓவியம்: பாலசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago