48-வது சென்னை புத்தகக் காட்சியில் அமெரிக்கன் சென்டர் பூத் - என்ன சிறப்பு?

By செய்திப்பிரிவு

சென்னை: “சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கன் சென்டர் பூத் எனும் அரங்கில், மாணவர்கள்,அறிஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புத்தகங்கள் மற்றும் மின்-வள ஆதாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை அடுத்த தலைமுறையில் மாற்றத்தை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என்று அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (டிச.27) தொடங்கியுள்ளது. 900 அரங்குகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி வரும் ஜன.12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் காட்சியில் அரங்கு எண் (F-51)-ல் அமெரிக்கன் சென்டர் பூத் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு: அமெரிக்கன் சென்டர், அமெரிக்காவின் உண்மையான மனப்பாங்கு, வாய்ப்பு மற்றும் வாக்குறுதியை வெளிப்படுத்தும் புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் நிலைமாற்றமளிக்கும் உரையாடல்கள், மற்றும் நிகழ்ச்சிகள் மூலம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்திய மற்றும் அமெரிக்க மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கு சவால்களை அளிப்பதுடன், ஊக்கமும் அதிகாரமும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சென்னையிலுள்ள அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் அமெரிக்கன் சென்டர் பூத்தை இன்று (டிச.27) துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “அமெரிக்கன் சென்டர் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பதால், புதுமையான உருவாக்கங்களையும் படைப்பாற்றலையும் தூண்டுவதோடு, இலக்கியம் மற்றும் தகவல்களின் நிலைமாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தவும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும் வைக்கிறது.

புரிதலை வளர்க்கவும், உலகில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த தனித்துவமான கருதுகோள்களைப் பயன்படுத்தவும் இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளோம்.

அமெரிக்கன் சென்டர் பூத், மாணவர்கள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களுக்கு வள ஆதாரங்களையும் பிரத்யேகத் திட்டங்களையும் வழங்கும். அமெரிக்காவில் கல்வி மற்றும் பரிமாற்ற வாய்ப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கன் சென்டர் பூத்துக்கு வருகை தருவோர் தள்ளுபடி கட்டணத்தில் உறுப்பினர் ஆகலாம் மற்றும் eLibraryUSA-வுக்கான வழிகாட்டுதல்களையும் பெறலாம்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் உள்ள அமெரிக்கன் சென்டரின் நூலகம் 15,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் விரிவான மல்டிமீடியா மின்-வள ஆதாரங்கள் உள்ளிட்ட பன்முகத்தன்மைக் கொண்ட சேகரிப்பைக் கொண்டுள்ளது. அமெரிக்கன் சென்டரின் உறுப்பினர்கள் செய்தி இதழ்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் வீடியோக்கள் போன்ற வள ஆதாரங்களை உள்ளிட்ட ஏராளமான வணிக தரவுத் தளங்களைக் கொண்ட டிஜிட்டல் நூலகமான eLibraryUSA-வுக்கான பிரத்யேகமான தனிப்பயனாக்கப்பட்ட அணுகலைப் பெறலாம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

மேலும்