திராட்சையில் இயேசு உருவம் வரைந்த கோவை கைவினை கலைஞர்!

By செய்திப்பிரிவு

கோவை குனியமுத்தூரை சேர்ந்த கைவினை கலைஞர் யு.எம்.டி.ராஜா, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திராட்சை பழங்களிலும், கத்தரிக்காயிலும் இயேசு உருவத்தை வரைந்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ சமயத்தின் தோற்றத்துக்குக் காரணமானவரான இயேசுவின் பிறந்தநாள் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ் மாதம் என்று கூறும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகப் பரிசுப் பொருட்களைப் பரிமாறியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இதேபோல ஏழை எளியோருக்கு உதவிகளைப் பரிசாக வழங்கி மகிழ்வித்தும் வருகின்றனர்.

சர்வ சமய பண்டிகைகளின் போது வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த யு.எம்.டி.ராஜா என்ற கைவினை கலைஞர், தன்னுடைய கைவண்ணத்தில் பல வகை படைப்புகளை உருவாக்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதுகுறித்து கைவினை கலைஞர் யு.எம்.டி. ராஜா கூறியதாவது: ஒவ்வொரு சமய பண்டிகையின் போதும் வித்தியாசமாக வாழ்த்து சொல்ல கைவினை படைப்புகளை உருவாக்கி வருகின்றேன். பொங்கல் பண்டிகையின் போது கரும்பில் எம்ஜிஆர் உருவத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்தேன். இதேபோல ரம்ஜான் பண்டிகையின் போது வித்தியாசமாக சப்பாத்தியில் மெக்கா மசூதி வரைந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திராட்சை செடியே இயேசு கிளை, நாங்கள் திராட்சையே இயேசு என்ற பைபிள் வரிகளில் வரும் கருத்துகளை குறிப்பிட்டு திராட்சை பழங்களில் இயேசு உருவப்படங்களை வரைந்துள்ளேன். ஒரு கொத்து திராட்சையில் 7 இயேசு உருவங்களை வரைந்துள்ளேன்.

மேரி கிறிஸ்துமஸ் என்ற ஆங்கில வரியும் 2024-ம் ஆண்டும் இதில் குறிப்பிட்டுள்ளேன். இந்த திராட்சை ஓவியத்தை வரைய சுமார் 3 மணி நேரமானது. கருப்பு பெயின்ட் மூலம் சிறிய பிரஷ் கொண்டு வரைந்தேன்.

கத்தரிக்காயில் கர்த்தர் உருவம்: இதேபோல கருப்பு நிற கத்தரிக்காயில் இயேசு உருவம் செதுக்கி உள்ளேன். இதற்காக பிளேடு மூலம் ஒன்றரை மணி நேரம் கத்தரிக்காயில் இயேசு உருவத்தைப் படைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

மேலும்