வயதானவர்களை ‘அசைவு நோய்’ அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்!

By சி.கண்ணன்

சென்னை: ''வயதானவர்களை 'அசைவு நோய்' அதிகம் பாதிப்பதால் கவனம் அவசியம்'' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலக அசைவு நோய் விழிப்புணர்வு தினம் (World Movement Disorders Day) ஆண்டு தோறும் நவம்பர் 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. மூளை நரம்பியல் தொடர்பாக ஏற்படும் நோய்களில் நரம்பியல் அசைவு நோயும் ஒன்று. உலகம் முழுவதுமே அசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2023 நிலவரப்படி உலகில் 21.6 லட்சம் பார்கின்சன் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2033-ல் 30.15 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை லட்சம் பேரில் 15 முதல் 42 பேருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோய் வயதானவர்களையே அதிகம் பாதிக்கிறது. மூளையில் உள்ள நரம்புகளில் சிதைவு ஏற்படுவதால் இந்த நோய் வருகிறது. அதுமட்டுமல்லாமல், பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்நோய் நோய் வர வாய்ப்புள்ளது. குடும்ப வழி, தைராய்டு நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு நோய் பாதிப்பு வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் நடுங்கிக்கொண்டே இருக்கும். தூக்கிப்போடுவது போல உணர்வார்கள்.

வளைந்து நிற்பது போன்ற தோற்றம் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு சமூகத்தில் மிகுந்த கூச்சம், அச்ச உணர்வுகளுக்கு ஆட்படுவார்கள். இந்தக் கூச்சம் அச்ச உணர்வுகளைப் போக்கும் விதமாக இந்த ஆண்டு உலக அசைவு நோய் விழிப்புணர்வு தினம், களங்கமாக நினைக்கும் எதிர்மறை சிந்தனைகளுக்கு (Fighting stigma) எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவிதமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நோய் பற்றி திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிம் முன்னாள் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் எம்.ஏ. அலீம் கூறியது: அசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருவிதமான கூச்ச உணர்வு இருக்கும். நோயின் தன்மையால் சமூகத்தில் தனக்கு அவச்சொல் ஏற்படுமோ என்று அச்சப்படுவார்கள். ஏனெனில், கை, கால்கள் நடுக்கம் இருந்துகொண்டே இருப்பதால் அதை பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவார்கள்.

உணவு சாப்பிடும்போது சிதறும். பொதுஇடத்தில் சாப்பிட யோசிப்பார்கள். முகத்தில் கலவையான எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். இந்தக் காலத்தில் இணையத்தில் நோய் பற்றி படித்து பார்த்துவிட்டு, மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாக்கிவிடுமோ என்கிற பயத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சிரத்தையுடன் மறைக்க முயற்சிப்பார்கள். இவை எல்லாமே நோயாளிகளுக்குக் கூடுதல் அழுத்தம் ஆகிவிடும்.

டாக்டர் எம்.ஏ. அலீம்

தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது இந்த நோயைக் குணப்படுத்த உதவும். இந்த நோய்க்கான மேம்பட்ட மருந்து, மாத்திரைகள் இன்று கிடைக்கின்றன. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சைகள், பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாகவே கிடைக்கின்றன. எனவே, இந்த நோய் வந்தால் வீடு, அலுவலகம், பொதுஇடங்களில் தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் தேவையில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பது நம்முடைய கடமை.

இந்த நோய் வராமல் தவிர்க்கவும் முடியும். அதற்கு முறையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மனநலம் மருந்து எடுத்து கொண்டால், அதை மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைக்காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மரபணு வழியாகவும் நோய் வரலாம் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகள் மருந்துகளை கையாள்வோர், அந்த சூழலில் பணியாற்றுவோர் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்