உலகக் கோப்பை கால்பந்து உற்சவத்தால் களைகட்டியிருக்கிறது ரஷ்யா. சாம்பியன் கனவில் 32 நாடுகள் முட்டி மோதிக்கொள்ளத் தயாராகிவிட்டன. எந்த அணி சாம்பியன் ஆகப் போகிறது எனக் கால்பந்தாட்ட ரசிகர்களின் ரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்திருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு உலக விளையாட்டு ரசிகர்களைக் கட்டிபோடும் ஒரே விளையாட்டு உலகக் கோப்பைக் கால்பந்தாட்டமே. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் தென் அமெரிக்க அணிகளும் ஐரோப்பிய அணிகளுமே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன.
World Cup - 2018 -2நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை இந்த முறை ரஷ்யாவில் ஜூன் 14 தொடங்குகிறது. பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றுப் போட்டிகள், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி எனப் பல கட்டங்களாக நடைபெறும் போட்டிகளைக் கண்டுகளிக்க உலகம் முழுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
உலகக் கோப்பையில் விளையாட அவ்வளவு சுலபத்தில் அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை. அதற்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள அணிகள்கூட வாய்ப்பு கிடைக்காமல் பார்வையாளராகும் அபாயம் கால் பந்தாட்டத்தில் மட்டுமே உண்டு!
சர்வதேசத் தரவரிசைப் பட்டியல்படி உலகக் கோப்பையை நடத்தினால் 32 அணிகளில் தென் அமெரிக்க, ஐரோப்பிய அணிகளுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வட, தென் அமெரிக்காவிலிருந்து 8 அனிகள் மட்டுமே விளையாட இருக்கின்றன. உலகக் கோப்பை என்பதால் எல்லா கண்டங்களிலும் உள்ள நாடுகளும் பங்குபெற வாய்ப்பை அளிக்கிறது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு.
அனைத்து நாடுகளில் உள்ள அணிகளுக்கு இடையே பல கட்டங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெறும் அணிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆசிய - பசிபிக் பிராந்தியத்திலிருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா என ஐந்து அணிகளும் வட மெரிக்காவிலிருந்து கோஸ்டரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய அணிகளும் தென் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய ஐந்து அணிகளும், ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், குரேஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய 13 அணிகளும், ஆப்பிரிக்காவிலிருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா ஆகிய 5 அணிகளும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் ரஷ்யாவும் நேரடியாகவே தகுதி பெற்றிருக்கின்றன.
ரஷ்யாவில் 11 இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த கால உலகக் கோப்பை போட்டிகளை வைத்து பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் கால்பந்தாட்ட நிபுணர்கள். அது ஜூலை 15 அன்று தெரிந்துவிடும்.
2018 சுவாரசியங்கள்
# ஒலிம்பிக் உள்பட பெரிய விளையாட்டுப் போட்டிகளை ரஷ்யா பலமுறை நடத்தியிருக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறுவது இதுவே முதன்முறை.
# ஐஸ்லாந்தும் பனாமாவும் முதன் முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் அறிமுகமாகின்றன. கடைசியாக 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஸ்லோவேக்கியா அறிமுக அணியாகக் களமிறங்கியது.
# போட்டியை நடத்தும் ரஷ்யா 1994, 2002, 2014 ஆகிய ஆண்டுகளில் சுற்றுப் போட்டிகளில் மட்டுமே விளையாடி போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த முறை எப்படியோ?
# 2018 உலகக் கோப்பைச் சின்னமாக ‘ஷபிவாகா’ என்ற ஓநாயை இணையதளத் தேர்தல் மூலமே தேர்வு செய்தார்கள்.
# உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாஸ்கோவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொடக்கப் போட்டியும் இறுதிப் போட்டியும் இங்குள்ள லூசினிக்கி மைதானத்திலேயே நடைபெறுகின்றன.
# இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக பங்கு பெறும் அரிய வாய்ப்பு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவுக்குக் கிடைத்தது. ஆனால், பயிற்சியாளருக்கு சம்பளம் முறையாகத் தரப்படாததால், ஃபிபா அமைப்பு ஜிம்பாப்வே அணியை வெளியேற்றிவிட்டது.
# போட்டியைக் காண வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா வருவோர், விசா இல்லாமலேயே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண்பதற்கான டிக்கெட்டை ஆதாரமாகக் காட்டினால் போதுமாம்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago