உத்தராகண்டின் ஹரித்வாரில் ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம்

By செய்திப்பிரிவு

ஹரித்வார்: உத்தராகண்ட்டின் ஹரித்வாரில் இரு ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நதிக் கரையில் ஹரித்வார் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித தலமாகும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்துஆண்டுதோறும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் ஹரித்வாருக்கு வருகை தருகின்றனர். ரஷ்யாவில் இருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து இரு தம்பதிகள் அண்மையில் ஹரித்வாருக்கு வந்தனர். ஏற்கெனவே திருமணமான இரு தம்பதிகளும் இந்து முறைப்படி அங்குள்ளஆசிரமத்தில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இந்திய பாரம்பரிய உடை அணிந்து, நெற்றியில் திலகமிட்டு அக்னியை சுற்றி 7 அடி நடந்து இருதம்பதிகளும் திருமணம் செய்தனர்.

ரஷ்ய தம்பதிகளின் திருமணத்தில் ரஷ்யாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்றனர். அவர்கள் கூறும்போது, “இந்த ஜென்மம் மட்டுமன்றி7 ஜென்மங்களும் இணைந்து வாழவேண்டும் என்று இரு தம்பதிகளும் விரும்பினர். இதன்காரணமாகவே இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். சிவபெருமானை வழிபட்டு இரு தம்பதிகளும் தங்களது திருமண பந்தத்தைஉறுதி செய்தனர்" என்று தெரிவித்தனர். ரஷ்ய தம்பதிகளின் சொந்த ஊர், பெயர் விவரங்களை ஆசிரம நிர்வாகிகள் வெளியிடவில்லை. எனினும் இரு தம்பதிகளின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE