உரிமையாளரை ஆம்புலன்ஸில் ஏற்றியதை பார்த்து விடாமல் துரத்திச் சென்று வாகனத்தில் ஏறிய வளர்ப்பு நாய்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதைப் பார்த்த அவரது பாசத்துக்குரிய வளர்ப்பு நாய் ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏறியது.

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக பிரிக்க முடியாத பிணைப்புஇருந்து வருகிறது. மனிதர்களிடத்தில் நாய்களும், நாய்களிடத்தில் மனிதர்களும் காட்டும் பரஸ்பர அன்பு அலாதியானது. மனித உணர்வுகளை நாய்கள் மதிக்கின்றன. மனிதர்களின் செல்லப்பிராணிகளில் முதலிடம் வகிப்பது நாய்கள்தான். தனது எஜமானருக்கு ஏதாவதுஆபத்து என்றால் முதலில் வருவதுவளர்ப்பு நாய்களே. ஆபத்தில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோரை வளர்ப்பு நாய்கள் காப்பாற்றிய செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன.

தற்போது எஜமானருக்கும், நாய்க்கும் இடையேயான பிணைப்பு தொடர்பான ஒரு செய்திதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகப்படியாக உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. ஆனால் இதுதொடர்பான வீடியோவைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உடல் நலம் குன்றிய ஒருவரை மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர். இதைப் பார்த்த அவரதுவளர்ப்பு நாய் ஓடி வந்து ஆம்புலன்ஸின் கதவருகே நின்று ஏக்கத்துடன் பார்க்கிறது. நாயின் அன்பை பார்த்த அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் கதவைத் திறந்துவிட்டு அவருடன் நாயைப் பயணிக்க அனுமதிக்கின்றனர்.

சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த மனதைத்தொடும் வீடியோவை இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் அதைபகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் மனிதர்களுக்கும், நாய் களுக்கும் இடையே உள்ளஅலாதியான பிரியம் வெளிப்படுவதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர் கூறும்போது, “எனது சகோதரி ஒருவர்வீட்டில் இறந்துவிட்டார். அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்றோம். அப்போது எங்கள் வீட்டில் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஆம்புலன்ஸை தொடர்ந்து பல கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து கொண்டே இருந்தது. இது மனதை நெகிழ வைப்பதாக இருந்தது’’ என்றார்.மற்றொருவர் கூறும்போது, “மனதைக் கவரும் கதை இது.இப்படிப்பட்ட மன உளைச்சலுக் குள்ளான சூழ்நிலையிலும் நாயும், உரிமையாளரும் மீண்டும் ஒன்று சேர்வது ஆறுதலாக இருந்துள்ளது. இது போன்ற தருணங்களில் கருணை மற்றும் இரக்கத்தின் செயல்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE