கோவை: ஆண் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் மரபுவழி நோயான தசை சிதைவு நோயை அடுத்த தலைமுறைக்கு வராமல் தடுக்கும் பணியில் கோவையைச் சேர்ந்த மரபணு பரிசோதனை, கலந்தாய்வு, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (எம்டிசிஆர்சி) ஈடுபட்டு வருகிறது. கோவை ராயல் கேர் மருத் துவமனை வளாகத்தில், ஆலோச னைகளை வழங்கி வரும் எம்டிசிஆர்சி தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் பி.ஆர்.லஷ்மி கூறியதாவது: மரபியல் ரீதியான காரணங்கள் தசை சிதைவு நோய்க்கு அடிப் படையாகும். டிஸ்ட்ரோபின் எனப் படும் மரபணு புரதக் குறைபாடு காரணமாக ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கும் மரபு வழி நோய் இது. இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.
எனினும், நோயின் பாதிப்பு தீவிரமடையாமல் பார்த்துக் கொள் வதுடன், அந்தக் குடும்பத்தில் மீண்டும் இந்நோயுடன் குழந்தை கள் பிறப்பதைத் தடுக்க முடியும். இதை கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்டிசிஆர்சி சாத்தியப்படுத்தி வருகிறது. தசை சிதைவு நோய்க்கான பரிசோத னைகளை மேற்கொள்வதுடன், பராமரிப்பு மற்றும் தடுப்பு வழி முறைகளை இலவசமாக வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 3,500 குழந் தைகளில் ஒரு ஆண் குழந்தைக்கு தசை சிதைவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்நோய் பாதிப்பு அதிமாக உள்ளது. எம்டிசிஆர்சி சார்பில் கிராமங் கள், நகரங்களைச் சேர்ந்த 7,000 சிறுவர்களிடம் மரபணு பரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 4,000 பேரின் மரபணு பரிசோதனை யில் டுஷின் தசை சிதைவு நோய் பாதிப்பு அறிகுறி கண்டறியப் பட்டது.
இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை, குடும்ப உறுப்பினர்கள் அன்புடனும், உறுதுணையாகவும் இருந்து ஊக்கப்படுத்த வேண்டும். முதலில் தசை சிதைவு நோய் பாதித்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தொடர்ந்து, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மரபணு சோதனை நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எம்டிசிஆர்சி நிறுவனத்தில் இதயம், நுரையீரல், நரம்பியல், குழந்தைகள், இயன்முறை மருத் துவர்கள் அடங்கிய குழுவினர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் பராமரிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு 334 பேருக்கு உடற்கூறு பயிற்சி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
இயன்முறை மருத்துவத்தின் மூலம் தசை சிதைவு நோயாளி களுக்கு அளிக்கப்படும் உடற்கூறு பயிற்சி ஓரளவுக்குப் பலன் தரு கிறது. தசை வலுக் குறையாமல் தடுத்தல், நடக்க வைத்தல், அவர் களின் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ளுதல் போன்ற வைகளுக்கு இயன்முறை மருத் துவத்தில் பயிற்சிகளும், ஆலோச னைகளும் உள்ளன. முக்கியமாக, எலும்பு வளைவுக் குறைபாடு வராமல் தடுக்க இயன்முறை மருத்துவம் உதவுகிறது. இந்தியாவில் தசை சிதைவு நோய் பாதிப்பு குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, மரபணு பரிசோதனை, ஆலோசனை, பராமரிப்பு, சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும். பெருநிறுவனங்கள், நன்கொடையாளர்கள் ஆதரவும், நிதியுதவியும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
» இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
» அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 5ஜி மொபைல் சந்தையில் 2-வது இடத்தில் இந்தியா
உலக தசை சிதைவு நோய் விழிப்புணர்வு தினம்.. இன்று
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
19 days ago