வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காளை உருவம் கண்டெடுப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்றைய அகழாய்வில், சூது பவள மணியில் சீரும் திமிலுள்ள காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து இன்றைய ஆய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1,550-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE