ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒருவர் தொடர்ந்து நன்றாக தூங்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்றால் அவருக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டயாபட்டிஸ் கேர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 84,000-க்கும் மேற்பட்டோரின் தூக்க முறைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில், தூக்கத்துக்கும், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையேயான தொடர்பு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வில், சராசரி 62 வயதுடையவர்கள் மற்றும் ஆரம்பத்தில் நீரிழிவு நோய் இல்லாதவர்கள் பங்கேற்றனர்.

அவர்களிடம் 7.5 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில், வழக்கமான தூக்க முறையை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது ஒழுங்கற்ற முறையில் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 34 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. வாழ்க்கை முறை, இணை நோய், உடல் பருமன், நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு இருப்பினும் முறையாக தூங்குவோருக்கு நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE