“எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழி” - நடிகர் வருண் ஷர்மா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சமூக வலைத்தளங்களில் எமோஜிக்கள் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளன. இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழியாகிவிட்டன” என இந்தி, பஞ்சாபி படங்களில் நகைச்சுவை, துணை வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் வருண் ஷர்மா ஓர் ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலக எமோஜி தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று எமோஜியைக் கொண்டாடும் நோக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல் தொடர்பு முன்னெப்போதையும் விட வேகமாகவும் வசதியாகவும் மாறிவிட்டன். எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது எமோஜிக்கள்தான். இன்று (ஜூலை 17) உலக எமோஜிக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

வார்த்தைகள் எதுவும் தேவையின்றி, இந்த சிறிய எமோஜிக்களே பல விஷயங்களை பலருக்கும் புரியவைக்கின்றன. ஒரு உணர்ச்சியற்ற எழுத்து வடிவ உரையாடல்களை ஒரு உணர்ச்சிபூர்வமான உரையாடல்களாக மாற்றியுள்ளது. இதுதான் எமோஜிக்களின் பரிணாமம் செய்திருக்கும் பெரிய மாற்றம். மனித வாழ்க்கை மற்றும் தகவல்தொடர்புகளின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான எமோஜிக்கள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எமோஜிக்கள் முக்கிய தகவல் பரிமாற்ற கருவியாக உள்ளன. தற்போதைய நாட்களில் எமோஜிக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் ஒரு சில எமோஜிக்களை பரிமாறாமல் யாருக்கிடையேயும் எந்த உரையாடலும் நடப்பதே இல்லை என்று சொல்லலாம். இத்தகைய எமோஜிகளின் அர்த்தங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு, நபர்களுக்கு, கலாச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் வேறுபடுகின்றன என்பதை மறுக்க முடியாது.

உலக எமோஜி தினம்: எமோஜிக்கள் 1990களின் பிற்பகுதியில் ஜப்பானிய கலைஞரான ஷிகேடகா குரிடாவால் உருவாக்கப்பட்டது. விர்ச்சுவல் உலகில் தொடர்புகொள்வதை எளிதாக்க 176 எமோஜிகளின் தொகுப்பை ஷிகேடகா உருவாக்கினார். ஒரு மொபைல் நிறுவனத்திற்காக முதலில் எமோஜிகளை உருவாக்கினார். அதன் பிறகு 2011 ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வ ஈமோஜிக்கென்று ஒரு தனி கீபோர்டை iOS இல் சேர்த்தது. அதன் பிறகு தான் எமோஜிக்கள் பிரபலமடைய ஆரம்பித்தது.

இதையடுத்து ஆன்ராய்டு போன்களும் அதுக்கென்று தனியாக ஒரு கீபோர்களை கொடுத்தப் பிறகுதான் இந்த விசியம் பிரபலமடைய ஆரம்பித்தன. எமோஜிக்கள் பரிமாணமடைந்து, மக்கள், உணவுகள், காலச்சாரம் மற்றும் விதவிதமான நிறத் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக உலாவி வருகின்றன. இந்த எமோஜிக்கள் டிஜிட்டல் மொழியின் ஒரு அங்கமாகிவிட்டன.

நடிகர் வருண் ஷர்மா ஃபுக்ரே திரைப்படத் தொடரில் "சூச்சா" என்ற நகைச்சுவைப் கதாபாத்திரத்தில் நடித்ததிற்காக மிகவும் பிரபலமானவர், அவர் பல்வேறு இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.

உலக ஈமோஜி தினமான இன்று, “எமோஜிக்கள் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை எப்படி மாற்றியமைத்துள்ளன என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்த்துள்ளார். இது குறித்து அவர், “எமோஜிக்கள் ஒரு தனித்துவமான மொழியாகிவிட்டன. ஒருவரின் மனநிலையை அவர்களின் எமோஜி தேர்வுகள் மூலம் அடிக்கடி உணர முடியும்.

நான் என்னுடைய 60 சதவிகித உரையாடல்களை எழுத்து வடிவத்திலும், 40 சதவிகித உரையாடல்களை எமோஜிகளின் மூலமாகவும் மேற்கொள்கிறேன். எனக்கும் எனது நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசிய உரையாடலாக இது உள்ளது. எனது குடும்ப நண்பர்களுடன் பேசும்போது , வாட்ஸ் அப்களில் எமோஜிகளை அனுப்பும்போது அர்த்தம் தரக்கூடிய விசியமாகவும், அன்பு பரிமாற்றத்துக்கு ஒரு எளிமையான விசியமாகவும் இருக்கிறது.

பக்கம் பக்கமாக எழுதுவதை விட, ஒரு சின்ன ஹார்ட் இமோஜி எனது உணர்ச்சிகளை எடுத்துரைக்கிறது. வரும் காலங்களில் இந்த எமோஜிக்கள் பரிமாணமடைந்து, ஆன்லைனின் ஒரு உணர்ச்சிபூர்வமான மொழி பயன்பாட்டைக் கொடுக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE