73 ஆண்டு பழமையான காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் பயணம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் தாமன் தாக்குர் (50). அவரது வீட்டில் கடந்த 1950-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்ஜிஒய்டி லால் பாரி என்ற பழைய கார் உள்ளது. 73 ஆண்டுகள் பழமையான இந்த காரில் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு செல்ல அவர் திட்டமிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி தாமன் தாக்குர், அவரது 75 வயது தந்தை, 21 வயது மகள் மற்றும் 4 உறவினர்கள் என மொத்தம் 7 பேர் அகமதாபாத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். முதலில் காரில் மும்பை சென்ற அவர்கள் அங்கிருந்து துபாய்க்கு கப்பலில் சென்றனர். அதே கப்பலில் காரையும் கொண்டு சென்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில்தரையிறங்கிய பிறகு அவர்கள் காரில் பயணத்தை தொடங்கினர். ஈரான், அஜர்பைஜான், துருக்கி, கிரீஸ், குரேசியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என சுமார் 16 நாடுகளைக் கடந்து லண்டனை சென்றடைந்தனர். 13,500 கி.மீ. தொலைவை அடைய அவர்கள் 76 நாட்கள் பயணித்தனர்.

இதுகுறித்து தாமன் தாக்குர் கூறியதாவது: எனக்கு 2 வயதானபோது எனது தந்தை, எம்ஜி ஒய்டி லால் பாரி காரை வாங்கினார். இதை எங்கள் குடும்ப உறுப்பினராகவே பாவித்து வருகிறோம். பிரிட்டனின் அபிடங்டன் நகரில் லால் பாரி கார் தயாரிக்கப்பட்டது. அந்த நகரம் வரை இந்தக் காரில் பயணம் செல்ல திட்டமிட்டோம்.

சுமார் 6 ஆண்டுகள் வரை பயண திட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தோம். முதலில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பெற்றேன். பயணத்துக்கு தேவையான ஆடைகள், உணவு வகைகளை தயார் செய்தேன். நீண்ட பயணம் என்பதால்காரை முழுமையாக சர்வீஸ் செய்தேன். எங்களது காரில் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். பல்கேரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் காரின் இன்ஜின் ஆயிலை மாற்றினோம்.

பிரிட்டனுக்குள் நுழைந்த பிறகு எங்களது கார் பழுதாகி நின்றுவிட்டது. அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் என்பவர் தன்னுடைய சொந்த செலவில் எங்களது காரை பழுது பார்த்து தந்தார். வாஸ்கோடகாமா கப்பலில் உலகை சுற்றினார். நாங்கள் எங்களது பழைய காரில் உலகை சுற்றி வந்துவிட்டோம். பல்வேறு நகரங்களில் எம்ஜி ஒய்டி லால் பாரி காரின் ரசிகர்கள், உரிமையாளர்கள் எங்களை உற்சாகமாக வரவேற்று உபசரித்தனர். இது ஒரு புதுமையான அனுபவம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனது பயண அனுபவத்தை தாமன் தாக்குர்வீடியோ, புகைப்பட பதிவுகளுடன் சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியிட்டார். இவை வைரலாக பரவி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்