மூதாட்டி சடலத்தை மயானம் வரை சுமந்து சென்று நல்லடக்கம் செய்த பெண்கள் @ தாராபுரம்

By எம்.நாகராஜன்

தாராபுரம்: தாராபுரத்தில் வயோதிகம் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை மயானம் வரை பெண்களே சுமந்து சென்று நல்லடக்கம் செய்தனர்.

தாராபுரம், மெட்ரோ சிட்டி பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணகுமார். வழக்கறிஞரான இவரது பெரியம்மா இந்திராணி (83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அங்கு வந்த திராவிடர் கழக பெண்களும் இறுதி மரியாதை செலுத்தினர். வழக்கமாக, இறந்தவர் உடல்களை ஆண்களே மயானத்துக்கு தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்வர். அந்த வழக்கத்தை மாற்றும் விதமாக, பெண்களே மூதாட்டியை மயானம் வரை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இது துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்