வாராணசி: நாட்டின் வட மாநிலங்களில் வரலாறு காணாத வெப்ப சூழல் நிலவி வரும் வேளையில் வருண பகவானை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி பகுதியை சேர்ந்த மக்கள்.
இந்த வினோத திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஆண் மற்றும் பெண் என இரண்டு தவளைகள், சிகப்பு நிற துணியால் சுற்றி வைக்கப்பட்டுள்ளன. அதனை சுற்றி சிலர் அமர்ந்துள்ளனர். பூசாரி ஒருவரும் மந்திரம் சொல்கிறார்.
அதோடு அந்த தவளைகளுக்கு சில சடங்குகளையும் அங்கிருந்தவர்கள் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. பெண்கள் சிலரும் பாடல் படுகின்றனர்.
» “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி இலக்கு 200+” - கோவை நிகழ்வில் ஸ்டாலின் பேச்சு
» கல்லூரிகளின் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்: யுஜிசி
மேலும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பழைய முறைகளில் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் வருண பகவானை வேண்டுவது மக்களின் நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி இந்தியா முழுவதும் மழை வேண்டி வினோத திருமணங்கள் நடத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago