மதுரை: தென் தமிழகத்தில் முதன்முறையாக நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதா, சித்தா, யோகா, இயற்கை முறை மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளை அதற் கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஒரே இடத்தில் மதுரை ஆயுஷ் மருத்துவமனை வழங்கு கிறது. இதனால் மக்களிடம் கவனம் பெற்று வருகிறது.
‘அலோபதி’ மருத்துவமனைகளில் மட்டுமே ஒரே இடத்தில் அனைத்து நோய்களுக்கும் அதற்கான சிறப்பு மருத்துவர்களுடன் சிகிச்சை வழங்கப் படுகிறது. இந்த மருத்துவமனைகளின் வளாகத்தில் இடம் கொடுக்கப்பட்டு அதில் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவப் பிரிவுகள் செயல்படும். அவசர நிவாரணத்துக்காக அலோபதி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி பிரிவுகளுக்குச் செல்ல மாட்டார்கள்.
அதனாலேயே இந்த மருத்துவமனைகளுக்கு மக்களிடம் தற்போது வரை அலோபதி போல் வரவேற்பு இல்லாமல் உள்ளன. அந்த குறையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் உதவியுடன் அமுதம் கூட்டுறவு அமைப்பு மூலம் தற்போது தமிழகத்தில் ‘ஆயுஷ்’ மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால், அலோபதி மருத்துவமனைகளைப் போல் ஒரே இடத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமி யோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதுதான். ஒவ்வொரு சிகிச்சை முறைக்கும் தனித்தனி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு நோயாளி களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்குகிறார்கள்.
» தோடர்கள் வாழ்வில் அங்கம் வகிக்கும் எருமைகள் - அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
» கட்டி முடித்து 11 மாதங்களாகியும் திறக்கப்படாத கிளை நூலகம்: ஏக்கத்தில் எவரெடி நகர் மக்கள்
மதுரை பை-பாஸ் சாலையில் பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுகிறது. தீர்க்க முடியாத பல நோய்களுக்கு சித்தர்களும், நமது முன்னோர்களும் அளித்த சிகிச்சை முறைகளை அப்படியே பின்பற்றி பாரம்பரிய மருத்துவ முறைகளில் எளிமையாக தீர்வளிக்கிறார்கள்.
இடுப்பு வலி, சர்க்கரை நோய், ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், சிறுநீரக கட்டிகள், தண்டுவட வலி, பாத வலி, குழந்தையின்மை மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு ஆயுஷ் மருத்துவர்கள் பக்க விளைவுகளே இல்லாமல் சிகிச்சை வழங்குவது, பொதுமக்களிடம் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. நோயாளிகள் விரும்பினால், அதற்கான பிரத்யேக கட்டணத்துடன் நீராவிக் குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல், முதுகெலும்பு குளியல் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
நோயாளிகள் ஒரு முறை ரூ.150 கட்டணம் செலுத்தினால் அடுத்த ஒரு மாதத்துக்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் இலவசமாக அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்றுக் கொள்ளலாம். 20 சதவீத தள்ளுபடியுடன் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆயுஷ் மருத்துவமனைகள் மதுரையைத் தவிர, வேலூரில் 2 இடங்கள், கோவை, கும்பகோணம், திருவண்ணாமலை, ஆம்பூர், கிருஷ்ணகிரி உட்பட 10 இடங்களில் செயல்படுகின்றன. சென்னையில் இந்த மருத்துவமனை இன்னும் வரவில்லை.
இந்த மருத்துவமனைகளுக்கான தலைமை அலுவலகம் வேலூரில் உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக பி.கிருஷ்ணன் உள்ளார். இந்த மருத்துவமனைகள், தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு நிறுவனம் (South India multi sate agriculture co operative society leed) சார்பில் மத்திய அரசு நிதியுதவியின் கீழ் செயல்படுகின்றன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக அலு வலரும், சித்த மருத்துவருமான திவ்யா கூறியதாவது: புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவ தோடு, ஒரு முறை வந்தவர்களுக்கு அடுத்தடுத்த முறைகளில் மருத்துவ ஆலோசனைகள், ஆன்லைன் மூலமும் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் பணிபுரியும் பலர், இதுபோன்ற ஆன்லைன் மருத்துவ ஆலோசனையால் பயன் பெறுகிறார்கள்.
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற சிகிச்சைகளுக்கு தனித்தனி மருத்துவ மனைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் வழங்கப்படும் இந்த சிகிச்சையைத்தான், ‘ஆயுஷ்’ என்று சொல்கிறார்கள். நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிகிச்சை களை, அவருக்கு முதலில் சிகிச்சை வழங்கும் மருத்துவரே பரிந்துரைக்கிறார். இப்படி ஒரே இடத்தில் தனக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, தனது உடல் ஆரோக்கியத்துக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்து சிகிச்சை வழங் கப்படுகிறது.
70 வயதானவர்களுக்குக்கூட சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும். நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் கேரளாவின் ஆயுர்வேத மசாஜ் தெரபி, மூலிகை மசாஜ், ஒத்தடம், தொக்கனம், புரவளியம் போன்ற தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற மசாஜ் சிகிச்சைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்டணமாகப் பெறப்படுகிறது. வெளியிடங்களில் பெறப்படும் கட்டணத்தை ஒப்பிடும்போது இது குறைவு.
அறுவை சிகிச்சை தேவைப்படக் கூடிய நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை இல் லாமலே நோய்களைக் குணப்படுத்தலாம். மூலிகை மருந்து, மாத்திரைகள் வழங்கப் படுவதால், தோல் பாதிப்பு, பக்க விளைவுகள் இருக்காது. மேலும், இந்த சிகிச்சை முறையில் தற்காலிக தீர்வு என்பது இல்லாமல் நோயின் ஆணி வேர் வரை சென்று சரி செய்ய முடியும், என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
17 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago