கொடுமுடியில் 24 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவியர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: கொடுமுடி எஸ்.எஸ்.வி.மகளிர் உயர்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் செயல்படும் எஸ்.எஸ்.வி. (ஸ்ரீ சங்கர வித்யாசாலா பள்ளி) பள்ளி கடந்த 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் 2000-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவியர், 24 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவியர் கூறியதாவது: நாங்கள் பள்ளி முடித்தபோது செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு, பிளஸ் 1 படிப்பதற்காக வெவ்வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டோம்.

இந்நிலையில் முன்னாள் மாணவியரை ஒன்றிணைக்க, வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதன் மூலம் பலரும் இணைந்து இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளோம். வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு பணிகளில் உள்ளோர், ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

நாங்கள் கல்வி கற்ற எஸ்.எஸ்.வி. பள்ளிக்கு தேவையான வசதிகளைச் செய்து தர முன்னாள் மாணவியர் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம், என்றனர். இந்நிகழ்வில், முன்னாள் மாணவியர் ஆடல், பாடலுடன் உற்சாகமாக பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE