கோடை வெயிலைச் சமாளிக்க நாம் படாதபாடுபடுகிறோம். உடனே ஏ.சி. வாங்கலாம் என நினைப்போம். சிலர் “அது எதற்கு? ஏர் கூலர் வாங்கலாமே, விலையும் குறைவு, பராமரிப்பதும் எளிது” என்பார்கள். நமக்கும் குழப்பம் வரும். உண்மையில் எது சிறந்தது ஏசியா, ஏர் கூலரா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஏர் கூலர்: ஏர் கூலர், எளிமையான தொழில்நுட்பத்தில் வேலை செய்யக் கூடியது. வெயில் காலத்தில் ஜன்னல்களில் ஈரத் துணியை நனைத்து இடுவது நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வதுதான். கிட்டதட்ட அதே மாதிரியான ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் ஏர் கூலர் வேலைசெய்கிறது. எக்ஸாஸ்ட் ஃபேன் எப்படி அறைக்குள் உள்ள காற்றை எப்படி வெளியே தள்ளிவிடுகிறதோ அதே மாதிரி வெளிக்காற்றை உள்ளே இழுத்துக் குளிர்விக்கிறது ஏர் கூலர்.
இந்த ஏர் கூலருக்குள் எக்ஸாஸ்ட் ஃபேன் போல் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃபேன் உபகரணத்துக்குள் காற்றை இழுக்கும். இந்தக் காற்று உள் நுழையும் வழியில் காற்றைக் குளிர்க்கும் துளைகள் உள்ள அட்டை இருக்கும். இதன் மேலாக நீர்த் துளிகள் விழும்படி அமைக்கப்படிருக்கும். இதனால் வரும் காற்று இந்தத் துளைகள் உள்ள நனைந்த அட்டையில் பட்டுக் குளிராகும்.
இந்தக் குளிர் காற்று வெளியே வந்து அறையைக் குளிர்விக்கும். இதில் காற்றை உள்ளிழுக்கும் பகுதியில் வெற்றிவேர், தென்னை நார் போன்றவற்றை வைக்கும் வழக்கமும் இருக்கிறது. இதில் காற்றிலுள்ள தூசிகளைக் களையும்படியான புதிய தொழில்நுட்பமும் இப்போது வந்துள்ளது. இது அல்லாமல் ரிமோட் மூலம் வேலைசெய்யும் படியான ஏர் கூலரும் இப்போது சந்தையில் கிடைக்கிறது. ஏசி போல சுவரில் பொருத்திக்கொள்வது போன்ற ஏர் கூலரும் உள்ளது.
» ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது’ - இதய தானம் கொடுத்தவரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்த நபர்
» செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை... - கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வழிகள்!
ஏர் கூலரின் மின்சாரப் பயன்பாடு ஏசியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புதிய காற்றைக் குளிர்வித்துத் தருவதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. ஏசியுடன் ஒப்பிடும்போது இதன் விலை மிகக் குறைவு. ஏர் கூலரைக் கையாள்வது எளிது. இதை ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். ஏசியுடன் ஒப்பிடும்போது ஏர் கூலரின் பராமரிப்புச் செலவு மிகக் குறைவு.
ஏர் கூலரின் பாதகங்கள்: ஏர் கூலர் வேலைசெய்வதற்கு அதற்குள் தண்ணீர் நிரப்பிவைப்பது அவசியம். இதனால் இதை அடிக்கடிச் சுத்தமாக்க வேண்டும். இல்லையெனில் இதில் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. சுத்தமாக்காமல் பயன்படுத்தும்போது அது ஆரோக்கியத்துக்குத் தீங்கு நேரும். ஏர் கூலர், காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படையில் வேலைசெய்யக் கூடியது. காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்குத் தீங்காகும்.
ஏசி: ஏசி வேலை செய்வது, ஃப்ரிட்ஜ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான். அறைக்குள் உள்ள வெப்பநிலையைக் குறைக்கும் இயல்புடையது. அதே சமயம் புதிய காற்றை உள்ளே இழுக்காது உள்ளே இருக்கும் காற்றைத்தான் சீராக்கும். ஏசி, இரு பாகங்களை உடையது. வீட்டுக்கு உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றுமாகப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வெளியில் உள்ள பகுதியில் குளிர்பதன அமிலம் (Refrigerant) வைக்கப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் ஹைட்ரோ குளோரோ ஃப்ளோரோ கார்பன் (hydrochlorofluorocarbons - hcfcs), ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன் (hydrofluorocarbons – hfc) போன்ற திரவங்கள்தாம் இதில் குளிர்பதன அமிலமாகப் பயன்படுகின்றன. இந்த அமிலம் ஏசியை இயக்கியதும் கம்பரஸர் மூலம் உள்ளே செலுத்தப்படும். இந்த அமிலம் தாமிரக் குழாய்கள் வழியாக உள்ளே எவாப்ரேட்டர் (evaporator) என்னும் அமைப்புக்குள் செல்லும். இந்த அமைப்புக்குள் செல்லும்போது வெப்பநிலை காரணமாகக் குளிர்ந்து ஆவியாக மாறும். இந்தக் குளிர்ச்சியைத்தான் ஏசி, அறையில் வெளிவிடும்.
ஆவியான அமிலம் கம்பரஸர் மூலம் வெளியே இழுக்கப்படும். பின் கண்டன்ஸர் மூலம் (condenser) மீண்டும் அமிலமாக மாற்றப்படும். ஆனாலும் அதிகமாக இருக்கும் அமிலத்தின் வெப்பம் வெளிப் பகுதியிலுள்ள ஃபேன் மூலம் வெளியேற்றப்படும்.
எல்லா விதமான ஊர்களுக்கும் ஏற்றவை. ஈரப்பத சதவீதம் அதிகமாக உள்ள ஊர்களுக்கும் குறைவாக உள்ள ஊர்களுக்கும் ஏற்றவை. முழுமையான குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஏர் கூலரின் ஒப்பிட்டால் தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. ஏர் கூலரின் தண்ணீர் நிரப்ப வேண்டிய வேலை இருக்கிறது. ஏசியில் சுவரில் பொருத்துவதால் இட நெருக்கடி கிடையாது. ஏர் கூலர் வைப்பதற்குத் தனி இடம் வேண்டும்.
ஏசியின் பாதகங்கள்: ஏர் கூலருடன் ஒப்பிடும்போது மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பராமரிப்புச் செலவும் ஏர் கூலருடன் ஒப்பிடும்போது அதிகம். விலை அதிகம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்ற முக்கியப் பாதகம் இதற்குண்டு. அதாவது இதில் பயன்படுத்தப்படும் குளிர்பதன அமிலம் ஓசோனைப் பாதிக்கக்கூடியது. ஆனால் இப்போது பயன்படுத்தப்படும் எச்.எஃப்.சி. அமிலம் ஓசோனைப் பாதிக்காது. மேலும் உலக வெப்பமயமாதல் புள்ளி குறைவான அமிலங்கள்தாம் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
8 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago
வாழ்வியல்
25 days ago