மதுரை: ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
தனக்கான திறன், அறிவு, அனுபவம் யோசனையைப் பயன்படுத்தி புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க, வயது, கல்வி என்பது ஒரு பொருட்டல்ல என தொடர்ந்து பல்வேறு புதிய கருவிகளை கண்டுபிடித்தவர் மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ரசாக். அந்த வகையில், தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீர் அளவைக் கண்டறியும் விதமாக புதிய கருவி ஒன்றை கண்டறிந்துள்ளார். இக்கருவி மூலம் குழாய்களை வெளியே தூக்கி கண்டறிவது தவிர்க்கப்பட்டு, மேல்பகுதியில் வைத்திருக்கும் சுவிட்ச் போர்டு மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறுகிறார்.
மேலும், அவர் கூறியது: ''சிறுவயது முதலே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். ஓரளவுக்கு படிந்திருந்தாலும், அனுபவத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே ரைஸ் குக்கர், இருபுறமும் சுழலும் மின்விசிறி, ரயில் தண்டவாள விரிசல் கண்டறியும் கருவி, மாற்றுத் திறனாளிக்கான பிரத்யேக டாய்லெட், ஊன்றுகோள், ராணுவத்தினருக்கான குளிர் தாங்கும் கோட், ஆட்டுக்குடல் சுத்தம் செய்யும் கருவி, தண்ணீரில் இருந்து ஆயிலை பிரித்தெடுக்கும் கருவி, ஆட்டோவுக்கான வாட்டர் வைப்பர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புக்களை கண்டறிந்துள்ளேன்.
இதற்காக அரசுத்துறை அதிகாரிகள், தனியார் அமைப்புகளிடம் இருந்து பாராட்டுச் சான்றிதழ், விருதுகளும் பெற்றுள்ளேன். எனது கண்டுபிடிப்புகளை முறையாக பதிவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முயற்சித்துள்ளேன். இந்நிலையில், கடந்த சில நாளுக்கு முன்பு மதுரையில் ஒருவர் வீட்டில் ஆழ்துளைக்குள் இருந்த மின் மோட்டார் பழுது நீக்கும் பணிக்காக சென்றேன். மோட்டார் பழுது நீக்கி, உள்ளே இறக்கிய நிலையிலும், போர்வெல்லில் மீண்டும் தண்ணீர் எடுக்கவில்லை. மறுபடியும் பிளாஸ்டிக் குழாய்களை வெளியே தூக்கி பார்த்தபோது, தண்ணீர் மட்டம் குறைந்து இருப்பது தெரிந்தது.
» பிஹாரில் சிராக் கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்: இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிப்பு
» 2023 ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு
இது போன்ற நேரத்தில் வீண் பணம் செலவு, கால விரயம் தடுக்க என்ன செய்யலாம் என, யோசித்தபோது, போர்வெல்லுக்குள் இருந்து குழாய்களை வெளியே எடுக்காமலே தண்ணீர் மட்டம் அறியும் கருவியைக் கண்டுபிடித்தேன். இந்த புதிய கருவியில் முக்கால் இஞ்ச் பிவிசி பிளாஸ்டிக் குழாயில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் தண்ணீர் அளவை அறியும் மிதப்புக் கட்டை போன்று வடிவில் 'ப்ளோட்டிங் மேக்னைட் சுவிட்ச்'களைப் பொருத்தவேண்டும். இவற்றை வயர்மூலம் இணைத்து மேல் பகுதியில் சுவிட்ச், ரெட் லைட் அடங்கிய கண்ட்ரோல் போர்டு பொருத்தவேண்டும்.
குழாய்க்குள் தண்ணீர் மட்டம் எப்போது குறைந்தாலும், கண்ட்ரோல் போர்டில் தானாகவே அலாரம் அடிக்கும் விதமாகவும், தண்ணீர் குறையும்போது, ரெட் கலர் லைட் எரியும் வகையிலும் கண்ட்ரோல் போர்டு செயல்பாடு வடிவமைக்கப்படும். ஆழ்துளை கிணறு அமைத்து, நீர்மூழ்கி மின்மோட்டரை உள்ளே இறக்கும்போது, எவ்வளவு ஆழத்திற்கு குழாய் இறக்குகிறோமோ அதுவரையில் கீழிறக்க வேண்டும். அதாவது அடிப்படையில் இருந்து தண்ணீர் எடுக்கும் 'புட் வால்வு' வரையிலும் இக்கருவியைப் பொருத்திய குழாயைச் சேர்த்து இறக்கவேண்டும்.
ஆழத்தைப் பொறுத்து சுமார் ரூ.2 ஆயிரம் முதல் 3 வரை மட்டுமே செலவாகும். பேட்டரி அல்லது மின்சாரம் மூலம் இக்கருவியை இயக்கலாம். ஒருமுறை ஆழ்குழாய்க்குள் இருந்து தண்ணீர் குழாய், மின் மோட்டாரை வெளியே தூக்கி பழுது நீக்க ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் செலவிடுகின்றனர். ஒருவரால் முடியாது. குறைந்தபட்சம் 3 தொழிலாளிகள் வேண்டும்.
ஆழ்குழாயினுள் உள்ள தண்ணீர் அளவை ஒன்று நூலில் கல் ஒன்றைக் கட்டி உள்ளே இறக்கிப் பார்த்தல் அல்லது சிறிய கல்லை தூக்கிப் போட்டு மட்டுமே அறிந்துகொள்ள முடியும். நான் கண்டுபிடித்த கருவியில் எளிதில் கண்டறியலாம். இரு கருவியை பொருத்த யாரும் விரும்பினால் தயாராக இருக்கிறேன். இதுபோன்ற புதிய கண்டுபிடிப்பால் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மதுரையிலுள்ள பள்ளி ஒன்றில் பகுதிநேர ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி'' என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
13 hours ago
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
3 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
26 days ago
வாழ்வியல்
27 days ago