கடையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் அதிசய குறியீடுகள்

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் அதிசயக் குறியீடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடையம் அருகே தட்டப்பாறை இடுகாட்டில், 2,000 ஆண்டு களுக்கு முற்பட்ட ஈமத்தாழிகள் நிறைந்து காணப் படுகின்றன. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொல்லியல் துறை மாணவர் ரமணா, இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு தாழியின் வாய்ப் பகுதியில் ஒரு வித்தியா சமான குறியீடு இருப்பதை கண்டறிந்தார். பின்னர், அதை தொல்லியல் துறை பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இக்குறியீடு தமிழ் உயிரெழுத் துகளில் கடைசி எழுத்தான ஃ போன்று உள்ளது.

மேலும் ஃ-வின் கீழே உள்ள இரு புள்ளிகளையும் ஒரு அரை வட்ட வடிவக் கோடு இணைக்கிறது. இந்த குறியீடு பெண்மையின் வளமையை குறிப்பதாக இருக்கலாம். இத்தகைய குறியீடு தாழிகளில் அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாகக் குறியீடுகள் தாழியின் வெளிப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. ஆனால் இந்த தாழியின் வாய்ப் பகுதியில் உள் புறத்தில் இந்த குறியீடு அமைந்திருக்கிறது என்று பேராசிரியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE